Sunday, May 12, 2019

எதிர்க்கட்சிகள் கூட்டம்: மம்தா, மாயாவதி புறக்கணிப்பு?

வரும் 21ம் தேதி டில்லியில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் கலந்து கொள்ள மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆறாவது கட்ட தேர்தல் இன்று(மே 12) நடந்த நிலையில், இறுதி கட்டமாக வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. பின்னர் 23ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. இந்நிலையில், டில்லியில், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இரண்டு தினங்கள் முன், அதாவது 21ம் தேதி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 21 கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து ஆலோசனை முக்கிய முடிவு எடுக்க திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடுகளை செய்து வந்தார்.





இந்நிலையில், இந்த கூட்டம் தொடர்பாக ஆங்கில மீடியாவில் வெளியான செய்தி: கடந்த வாரம், இந்த கூட்டம் தொடர்பாக சந்திரபாபு, கோல்கட்டா சென்று திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தலுக்கு முன் எந்த கூட்டமும் தேவையில்லை மம்தா கூறிவிட்டார். இது போன்ற பதிலைதான் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் கூறியுள்ளார்.

தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக வந்தால், பிரதமர் பதவி யாருக்கு என்பதில் தெளிவான முடிவு கிடைக்காததே காரணம். பிரதமர் பதவி குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பதிலளிக்க மறுத்து வந்தாலும், மம்தா பானர்ஜி, மாயாவதிக்கும் பிரதமர் பதவி மீது ஒரு கண் உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் பெயரை, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் வழிமொழிந்துள்ளனர். மாயாவதியும், மம்தா பானர்ஜியும், தேசிய அளவில், காங்கிரசுடன் நல்ல உறவில் இருந்தாலும், மாநிலத்தில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மறுத்து விட்டனர். 

மாயாவதி, உ.பி.,யில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மறுத்ததுடன், ம.பி.,யில் கமல்நாத் தலைமையிலான கமல்நாத் அரசுக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெற போவதாக கடந்த சில மாதங்களாக மிரட்டல் விடுத்து வருகிறார். நேற்று(மே 11) கூட ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் நடந்த பலாத்காரம் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, போலீசார், மாநில நிர்வாகம் மீது சுப்ரீம் கோர்ட் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரதமர் பதவி மீது உள்ள ஆசை குறித்து வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.





கடந்த 30 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் பதவி மீது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், அக்கட்சி தலைவர்கள் பிரதமர் பதவிக்கு மம்தா தகுதியானவர் எனக்கூறி வருகின்றனர். 


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...