Saturday, May 11, 2019

அரசு வீட்டை காலி செய்தார் நல்லக்கண்ணு.

அரசு உத்தரவை ஏற்று, மூத்த அரசியல் தலைவர் நல்லக்கண்ணு, அரசு குடியிருப்பை காலி செய்தார். 'அவருக்கும், கக்கன் குடும்பத்திற்கும், வேறு வீடு ஒதுக்க வேண்டும்' என, அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.சென்னை, தி.நகர், சி.ஐ.டி., நகரில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இங்குள்ள வீடுகள், 40 ஆண்டுகள் பழமையானவை.இந்த குடியிருப்பில், இந்திய கம்யூ., மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லக்கண்ணு; முன்னாள் அமைச்சரும், சுதந்திர போராட்ட தியாகியுமான, கக்கனின் மகன் உள்ளிட்டோர், வாடகைக்கு வசித்து வந்தனர். 
'நோட்டீஸ்' குடியிருப்பில் உள்ள வீடுகளை இடித்து விட்டு, புதிய வீடுகள் கட்ட, வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. எனவே, அங்கு குடியிருந்தவர்களை காலி செய்யும்படி, 'நோட்டீஸ்' அனுப்பியது. அதையேற்று, நல்லக்கண்ணு, நேற்று வீட்டை காலி செய்தார். இது குறித்து, வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:நீதி மன்ற உத்தரவின்படி, வீடுகளை காலி செய்யும்படி தெரிவிக்கப்பட்டது. உத்தரவை ஏற்று, நல்லகண்ணு வீட்டை காலி செய்துள்ளார். அவர், வேறு வீடு ஒதுக்கும்படி கோரவில்லை. அங்கு குடியிருந்தவர்கள் எல்லாம், வீடுகளை காலி செய்து வருகின்றனர். மாற்று வீடு கேட்போருக்கு, காலியாக உள்ள குடியிருப்புகளில், வீடு வழங்கி வருகிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர். கண்டனம்அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன், தன் 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:தியாகி நல்லக்கண்ணு, தியாகி கக்கனின் மகன் ஆகியோரை, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இருந்து, வெளியேற்றி இருப்பது கண்டனத்திற்குரியது. அந்த இடத்தில், புதிய திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும், அவர்களுக்கு மாற்று வீடு ஒதுக்கி தராமல், இந்த நடவடிக்கையை மேற்கொண்டது சரியானதல்ல. இ.பி.எஸ்., அரசு, தியாகத்தை மதிக்கத் தெரியாத அரசு என, நிரூபித்துள்ளது. தவறை உணர்ந்து, இருவருக்கும் வேறு இடத்தில், வீடு ஒதுக்கிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


 அரசு வீட்டை காலி செய்தார் நல்லக்கண்ணு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...