Thursday, May 23, 2019

வாசமில்லா மலர்கள் மலர்ந்தும் பலன் என்ன?

* மத்தியில் தாமரை மீண்டும் மலர்கிறது. வாழ்த்துகள்.
* தமிழகத்தில் காகிதப் பூக்கள் பூத்துள்ளது. வாழ்த்துகள்.
* சட்டமன்றத்தில் அ.தி.மு.க. தக்க வைத்துக் கொண்டது. வாழ்த்துகள்.


* தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்க காரணமாக நான் நினைப்பது,

1. தமிழகத்தில் பா.ஜ.க.-வைப் பற்றிய எதிர்கட்சிகளால் தவறான பிரச்சாரம்.
(15லட்சம் , ஸ்டெர்லைட் , மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் , நீட் பரீட்சை)

2. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தினகரன் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.

3. பா.ஜ.க. தலைவர்கள் , தொண்டர்கள் மத்திய அரசின் நல்ல திட்டங்களை அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் செல்லவில்லை. மற்ற கட்சிகளிடம் இருந்த உழைப்பு இவர்களிடம் குறைவு.
4. கூட்டணி அமைப்பதில் கடைசி வரை இழுபறி நிலை.
தமிழகத்தில் பா.ஜ.க-வினர் இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே இங்குள்ள நிலை ஒரளவு மாறக்கூடிய சூழ்நிலை உருவாகும். இந்த தேர்தல் அவர்களுக்கு ஒரு பாடம்.
திராவிட முன்னேற்றக் கழக எம்பி களால் யாதொரு பயனும் தமிழகத்துக்கு இருக்காது. ஒரே ஒரு திட்டம் கூட அவர்களால் கொண்டு வர முடியாது. கூச்சல் கூட போட முடியாது ஏனெனில் ஹிந்தி தெரியாது ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது. நாய் பெற்ற தெங்கம் பழம் என்ற செய்யுள் உண்டு.
 ஊடகங்கள் ஆரம்பம் முதலே திட்டமிட்டு பாஜ ஆட்சியின் மீதும் அடிமை ஆட்சி என்று மாநில ஆட்சியின் மீதும் புரளிகளை கிளப்பிவிட்டது. எடப்பாடியின் நல்லாட்சியை செங்கோட்டையன் மற்றும் தங்கமணி போன்ற அமைச்சர்களின் திறமையை மக்கள் மத்தியில் எடுத்துச்செல்லவில்லை. வேறு யாரும் இருந்திருந்தால் தமிழக நிலைமை அம்போ தான். கஜா புயலின் போது ஆரம்பத்தில் பாராட்டிவிட்டு பிறகு ஓட்டுக்காக எதிர்நிலை எடுத்து அந்த சமயத்திலும் அரசியல் செய்தது... தமிழக மக்கள் உணர்ச்சிகள் தூண்டிவிடப்பட்ட முட்டாள்கள் தான் என்பதை இப்போதும் நிரூபித்திருக்கிறார்கள். காசு கொடுத்தால் தன்னையே அடிமைப்படுத்தவும் தயாராகிவிட்டு அடுத்தவரை அடிமை ஆட்சி என்பது... தமிழகம் திருந்தாது.... திமுக வந்தபிறகுதான் பட்டு திருந்தும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...