சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கோவை மாணவி, 497 மதிப்பெண் பெற்று, தேசியளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதித்துள்ளார்.
சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, நேற்று வெளியிடப்பட்டது. கோவை மாவட்டம், லட்சுமி மில்ஸ் அருகேவுள்ள, வித்யா நிகேதன் பள்ளியின் மாணவி காவியா வர்ஷினி, 497 மதிப்பெண்களுடன் தேசியளவில் மூன்றாம் இடம் பிடித்து, பெருமை சேர்த்துள்ளார்.
தமிழில், 99, ஆங்கிலத்தில், 98, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில், தலா, 100 மதிப்பெண் பெற்றுள்ளார். இவரது தந்தை பாபு தொழில் முனைவோராகவும், தாய் விமலா ராணி கூட்டுறவு வங்கியிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
மாணவி காவியா வர்ஷினி கூறுகையில், ''ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி, பெற்றோரின் ஒத்துழைப்பால், இது சாத்தியமானது. தேர்வுக்கு முன் பதற்றம் இல்லாமல் படித்தேன். எதிர்காலத்தில் புற்றுநோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்,'' என்றார்.

No comments:
Post a Comment