*வெட்டி வேரின் சிறப்புகள் !!...
வெட்டி வேர் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அதன் பயன்கள் பற்றி பலபேருக்குத் தெரியாது.
👉 அந்த காலங்களில் நம்முடைய தாத்தா, பாட்டி வீடுகளில் ஒரு மண்பானையில் தண்ணீர் நிரப்பி, அதில் வெட்டி வேர், விளாமிச்சை வேர் முதலியவற்றை அந்த மண்பானையில் போட்டு தண்ணீர் குடிப்பார்கள்.
👉 இதன் மூலம் உடல் சு டு குறையும் என்று அறிந்தே இந்த முறையை பின்பற்றி வந்தார்கள்.
👉 மேலும் தற்போது பல நிறுவனங்கள் வெட்டி வேரை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
👉 இதற்கு காரணம் நம்மளை விட, அவர்களுக்கு வெட்டி வேரின் நன்மைகள் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது.
👉 ஆனால் நமக்கு வெட்டி வேர் பற்றிய விழிப்புணர்வும் இல்லை, அவற்றை பயன்படுத்துவதும் இல்லை.
👉 மேலை நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்க பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்றவைகளுக்கு வெட்டி வேர் பயன்படுத்தப்படுகிறது.
வெட்டி வேரின் நன்மைகள் :
👉 கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை வாங்கி ஜன்னல்களில் கட்டினால் அறையின் வெப்பத்தைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரும்.
👉 மேலும் அந்த தட்டிகளில் நீர் தௌpத்து, அதன் மூலம் உருவாகும் வாசனை காற்றை சுவாசிப்பதால் மன அமைதி ஏற்படுகிறது.
👉 கோடைகாலத்தில் வெட்டிவேரை குடிநீரில் போட்டு குடித்து வந்தால் உடல் சு ட்டை குறைத்து, கோடை காலங்களில் அதிக தாகம் எடுப்பதை தடுக்கும்.
👉 வெட்டி வேர், விலாமிச்சை வேர், பாசிப்பயிறு, சந்தனம் இவற்றை பொடியாக்கி பன்னீர் அல்லது தண்ணீரில் கலந்து தடவி வந்தால் வெயில் காலத்தில் காணும் வேர்க்குரு மறையும்.
👉 சிலருக்கு தோள்பட்டை மற்றும் முதுகுப் புறங்களில் பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண்களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.
👉 இந்த இரு பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வெட்டி வேரை பயன்படுத்தலாம்.
👉 பச்சைப்பயறு, சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து உடலுக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் இந்த பிரச்சனை குணமாகும்.
👉 வெட்டி வேர் சிறந்த வாசனை திரவியம் தயாரிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது.
👉 மண் அரிப்பைத் தடுக்கவும், நீரின் கடினத் தன்மையை குறைக்கவும் வெட்டிவேர் பயன்படுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment