Sunday, May 5, 2019

மெட்ராஸ்கார‌ர்களை திருக்குறளுக்கு உரை எழுதச் சொன்னால் எப்புடி இருக்கும்?

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக.
பொருள்: க‌ஸ்மால‌ம், ஒயுங்கா ப‌டி, ப‌ட்ச‌து ப‌ட்சாமாறி ந‌ட்ந்துக்க‌டா, பேமானி!
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.
பொருள்: டேய், வூட்டுக்கு வந்த‌ விருந்தாளி கைல ந‌ல்லா‌ மூஞ்சி குட்து பேசுடா, இல்ல‌ன்னா ப‌ய‌ அனிச்ச‌ம் பூவ‌ மோந்தா மாரி வாடி வுடுவாண்டா ச‌வாரி, அட‌ எங் கேப்மாரி.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
பொருள்: சோமாறி, கொய்யாப் ப‌ய‌த்த‌ கைல‌ வ‌ச்சிக்கினு எவ‌னாவ‌து கொய்யாக்காவ‌ துண்ணுவானாடா? ந‌ல்ல‌ வார்த்தையா நாலு பேசுவியா, அத‌ வுட்டுப்புட்டு கெட்ட‌ கெட்ட‌ வார்த்தையா பேசிக்கினு கீற‌? காது கொய்யின்னுதுடா, கொய்யால‌!
புறம் கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்
பொருள்: ப‌ன்னாட‌, ஒர்த்த‌ன‌ப் ப‌த்திப் பின்னால‌ போட்டுக் குட்து பொய‌க்க‌ற‌தெல்லாம் ஒரு பொய‌ப்பாடா? அதுங்காட்டி நாண்டுகிட்டு சாவ‌லாம்டா, ச‌னிய‌ம் புட்ச்ச‌வ‌னே!
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
பொருள்: எவ‌ன் வேணா சும்மா உதார் உட‌லாம் ம‌ச்சி, ..சொன்னா மாரி செஞ்சிப்பாரு அப்ப‌ தெரியும் மேட்ட‌ரு, நெஞ்சில‌ கீற‌ ம‌ஞ்சா சோறு எகிறிப்பூடும் பாத்துக்க‌.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...