
வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?
வெயிலில் வியர்க்குரு வராமல் தடுப்பது எப்படி?
ஒரு நாளைக்கு இருமுறை குளிக்க வேண்டும். அவ்வாறு குளிக்கும்போது
உடலின் எல்லா பகுதிகளிலும் சோப்பு போட்டு நன்றாக தேய்த்து குளிக்கவேண்டும். குளித்து முடித்தவுடன், உடலின் எல்லா பகுதிகளிலும் ஈரம் மற்றும் ஈரப்பதம் துளியும் இல்லாதவாறு மென்மையான துணிகொண்டு துடைத்துவிட வேண்டும். நம் உடலில் அழுக்குகள் இல்லையென்றால் அங்கு வியர்க்குரு வருவதற்காக வாய்ப்பும் இல்லை.
ஒருவேளை உடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் நமது தோலில் இருக்கும் வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால் வியர்க் குரு வரும். இந்த வியர்க்குருவால் தேவையற்ற நமிச்சல் ஏற்படும், உடலும் சிவந்து போகும். எனவே வெயில் காலத்தில் தினமும் 2 தடவை குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு வராது

No comments:
Post a Comment