புதுக்கோட்டை மாவட்டம், கொத்தமங்கலத்தில், நீர் நிலைகளை துார்வாரும் இளைஞர்களிடம், மூதாட்டி ஒருவர், 10 ஆயிரம் ரூபாயை கொடுத்துஉதவியுள்ளார்.
இந்தப் பணம், 100 நாள் வேலை திட்டத்தில் உழைத்து, சம்பாதித்தது.புதுக்கோட்டை மாவட்டத்தில், சில ஆண்டுகளாக, நிலத்தடி நீர் குறைந்து வருகிறது.இதனால், கொத்தமங்கலம் பகுதி இளைஞர்கள் இணைந்து, அம்புலி ஆற்றில், காமராஜர் காலத்தில்கட்டப்பட்டு, பராமரிக்கப்படாமல் உள்ள அணையில் இருந்து, தண்ணீர் செல்லும் கால்வாய்களை சீரமைத்து, குளங்களை துார்வாரியும் வருகின்றனர்.கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜம்மாள், 62, என்பவர், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை செய்து கிடைத்த சம்பள பணத்தை, பேரக் குழந்தைகளின் கல்விக்காக சேமித்துவைத்திருந்தார்.அதில், 10 ஆயிரம் ரூபாயை, நீர்நிலைகளை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம்வழங்கினார்.
ராஜம்மாள் கூறியதாவது: இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, சொந்த செலவில் குளம், கால்வாய்களை துார்வாரி, தண்ணீரை சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுஉள்ளனர். தண்ணீருக்காக இளைஞர்கள் எடுக்கும் முயற்சிக்கு உதவும் வகையில், 10 ஆயிரம் ரூபாயை வழங்கினேன்.இளைஞர்களின் நற்பணியால், வரும் நாட்களில் மழை பெய்தால், இங்குள்ள குளங்களில் தண்ணீர் நிரம்பும்.இவ்வாறு அவர்கூறினார்.
இவரைப் பாராட்ட விரும்புவோர், தொடர்பு கொள்ள: 93602 34483.

No comments:
Post a Comment