திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு வந்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தி.மு.க., இடைத்தேர்தலில் தோற்றால், அழகிரிதான் அடுத்த தி.மு.க., தலைவராவார் என்று 'பஞ்ச்' வைத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், '' நான் திருப்பரங்குன்றம் தொகுதியில் விளாச்சேரி பகுதியில் பிரசாரம் செய்தேன். அதே பகுதியில் தான் ஸ்டாலினும், பிரசாரம் செய்தார். அப்போது அங்கு ''சென்று வா மகன சென்று வா'' என்ற பாடல் பாடியது. அது கோவலன் கதைப்பாடல். கோவலன் சென்ற பிறகு திரும்பி வரவே இல்லை. தி.மு.க.,வின் கதையும் அது தான். ஸ்டாலின் இனி திரும்ப வரவே முடியாது என்பதற்கு அந்த பாடலே சாட்சி.
தற்போது தி.மு.க.,வில் நடக்கும் சில செய்திகள் சந்தேகம் தருகின்றன. கனிமொழி மற்றும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடந்தது ஸ்டாலின் சொல்லித்தான் என்று தி.மு.க., வட்டாரங்களில் பேசுகின்றனர். தற்போது நடைபெறும் தேர்தலில் தி.மு.க., தோல்வி அடையும் பட்சத்தில், தி.மு.க., தலைவராக மதுரை மண்ணின் மைந்தர் மு.க.அழகிரி தான் தலைவராக பதவி ஏற்பார்,'' என்று பஞ்ச் வைத்தார்.

No comments:
Post a Comment