Sunday, May 19, 2019

மோடிக்கு மக்கள் ஆசி உள்ளது ஓட்டளித்த ஜோஷி நெகிழ்ச்சி.

'பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களின் ஆசி உள்ளது. நான் யார், அவருக்கு ஆசி வழங்க,'' என, பா.ஜ., நிறுவனர்களில் ஒருவரான, மூத்த தலைவர், முரளி மனோகர் ஜோஷி, 85, கூறினார்.
மோடி, மக்கள் ஆசி, ஜோஷி, நெகிழ்ச்சி

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள, வாரணாசி லோக்சபா தொகுதியில், பிரதமர், மோடி  மீண்டும் போட்டியிடுகிறார். நேற்று நடந்த, ஏழாவது கட்டத் தேர்தலில், இந்தத் தொகுதிக்கும் ஓட்டுப் பதிவு நடந்தது.பா.ஜ., நிறுவனர்களில் ஒருவரான, முரளி மனோகர் ஜோஷி, ஓட்டளித்தார்.அப்போது, 'பிரதமர் மோடிக்கு உங்களுடைய ஆசி உள்ளதா' என, நிருபர்கள் கேட்டனர். ''அவருக்கு, மக்களின் ஆசி உள்ளது. நான் யார், ஆசி வழங்க,'' என்று, ஜோஷி, நெகிழ்ச்சியாக பதிலளித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி ஆகியோர் இணைந்து, பா.ஜ.,வை துவக்கினர். நான்கு முறை, லோக்சபாவுக்கும், இரண்டுமுறை, ராஜ்யசபாவுக்கும், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கட்சியின் தேசியத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும், ஜோஷி பணியாற்றியுள்ளார்.


கடந்த, 2009ல், வாரணாசி தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். நரேந்திர மோடி போட்டியிடு வதற்காக, 2014ல், கான்பூர் தொகுதிக்கு மாறினார். மோடி பிரதமரான பின், கட்சியில், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பதவி இல்லை என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. அதனால், அத்வானி, ஜோஷி போன்றவர் களுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...