எல்லோருக்குமே தெரியும்.. உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு அவருடைய குடியுரிமை தொடர்பாக விளக்கமளிக்கும்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்று. எதற்காக இந்த விளக்கத்தைக் கேட்டு உள்துறை அமைச்சகம் இந்த நோட்டீஸ் அனுப்பியது..? இதன் உள் நோக்கம் என்ன..?
முதலில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த ஒட்டு மொத்த விசாரணையுமே ராகுலின் குடியுரிமையைப் பற்றி விசாரிப்பதற்காக இல்லை. குழப்பமாக இருக்கிறதா..? இவையனைத்துமே ராகுல் காந்தி வெளிநாடுகளில் வைத்திருக்கும் பணம், சொத்து, தொழில் முதலியவைகளைக் குறி வைத்து ஆரம்பிக்கப்பட்டதே..!
குடியுரிமை என்பது வெறும் கண் துடைப்பு மட்டுமே.
🚩ஒருவேளை ராகுல் காந்தி.. உள்துறை அமைச்சகத்திற்கு எப்போதுமே நான் இந்தியப் பிரஜைதான் என்று சொல்லிவிட்டால்.. உடனடியாக எழும் கேள்வி.. அப்படியானால்.. வெளிநாட்டில் உள்ள சொத்துகளின் உரிமையாளர் யார்..? அதேபோல வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணம் யாருடையது..? எதனால் இவர் பெயரில் இருக்கிறது..? ஏன் அதனை இதுவரை எந்த தேர்தலிலும் இவர் குறிப்பிடவில்லை என்று அலை அலையாகக் கேள்விகள் எழும்.
🚩உடனே.. ராகுல் காந்தி UK யில் தான் தொழில் நடத்துவதால் அதற்காக பொய்யான ஒரு UK குடியுரிமை வைத்துள்ளேன். உண்மையில் நான் இந்தியன் என்று சொல்லியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்.
இதைத் தொடர்ந்து மேலும் இரண்டு பிரச்னைகள் வரும்.
🚩முதலில் UK வில் எப்படி இவரால் சொத்துகள் வாங்க முடிந்தது..?
🚩இந்திய சட்டம் மிகவும் தெளிவாகச் சொல்லியிருப்பது என்னவென்றால்.. யாருக்கேனும் வெளி நாடுகளில் சொத்துகள் வாங்கும் எண்ணமிருந்தால்.. அவர்கள் உள்துறை அமைச்சகத்திலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் அனுமதி பெற வேண்டும். ஆனால் இங்கு நம்ம அண்ணன் அது போல் எதுவும் செய்யவில்லை.
🚩அடுத்த பிரச்னை எதனால் இவர் இந்த இரண்டு அமைச்சகத்திலும் அதாவது 2005 இல் அவர்களது ஆட்சிக் காலத்தில் அனுமதி வாங்கிக் கொள்ளவில்லை. காரணம்.. வெகு சாதாரணம். கருப்புப் பணத்தை வைத்து சொத்துகள் வாங்கும் போது அனுமதியெல்லாம் வாங்கினால் கதை கந்தலாகி மொத்த நாத்தமும் வெளியே வந்துவிடும் என்பதுதான்..!
🚩இந்த காரணங்கள் பயங்கரமாக இடிப்பதால்.. ராகுல் காந்தி தான் ஒரு பிரிட்டிஷ் பிரஜை என்று சொல்லியாக வேண்டியதுதான். ஆனால்.. அப்படி ஒப்புக் கொண்டுவிட்டால்.. இவருடைய இந்தியக் குடியுரிமை தானாகவே ரத்தாகிவிடும்.

🚩இப்போது அடுத்த கேள்வி ஒன்று எழுகிறது. ராகுல் காந்திக்கு UK வில் நிஜமாகவே சொத்துகள் இருந்தால்.. எதற்காக அதனை அரசாங்கத்திடமிருந்து மறைக்க வேண்டும்..? அதோடு.. இவர் UK யில் என்ன தொழில் செய்தார்..? ஏனெனில்.. இவருடைய அலுவலகம் லண்டன் நகரத்திலிருந்து 90 மைல்கள் தள்ளி.. மனித சஞ்சாரமே இல்லாத ஒரு பொட்டல் காட்டில் இருக்கிறது.
🚩சரி.. ஐயா.. அந்த அலுவலகத்தை தொழில் நடத்துவதற்காகத்தான் வாங்கினேன் என்றாலும் ஏன் அது 2004 இலிருந்து மூடியே வைக்கப்பட்டுள்ளது..? எங்கிருந்து வருமானம் இவருக்கு வருகிறது..? எதற்காக இவர் UK இல் வராத வருமானத்திற்கு அங்கு வரி கட்டுகிறார்..?
🚩இதிலிருந்து தெரிவது இது வெறும் கருப்புப் பண மோசடி என்பது..!
🚩ஒருவேளை ராகுல்காந்தி தன்னுடைய வெளிநாட்டுச் சொத்துக்களை தியாகம் செய்ய நினைத்து.. இந்திய MP பதவியைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தால்.. அவர் தான் ஒரு இந்தியப் பிரஜைதான்.. பிரிட்டிஷ் குடிமகன் அல்ல என்று சொல்ல வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்.. உடனே இந்திய அரசாங்கம் ராகுலின் ஒட்டு மொத்த வெளிநாட்டு சொத்துக்களை முடக்கிவிடும். ஏனென்றால்.. அத்தனை ஆவணங்களிலும் இவரின் கையெழுத்து உள்ளது.
🚩ஒருவேளை நான் பிரிட்டிஷ் பிரஜை என்றால்.. உடனடியாக இவரின் இந்தியக் குடியுரிமை ஃபணாலாகிவிடும். அதற்கும் மேல்.. இவரின் MP பதவியும் டுமீலாகி.. இத்தனை நாள் இந்திய அரசாங்கத்தையும் பாராளுமன்றத்தையும் ஏமாற்றியதற்காக கன்பர்ம்டாக திகார் களி உறுதிபடுத்தப்படும்..!
🚩இதுவரை இது விஷயமாக சுப்ரமணிய ஸ்வாமி செய்த காரியங்கள் அனைத்துமே மிகவும் முறையாகத் தெளிவாகச் செய்திருக்கிறார். அவர் ஒரு வக்கீல் இல்லை என்றாலும்.. இதுவரை அவர் எடுத்த காரியங்கள் அனைத்துமே வெற்றி கண்டிருக்கிறர். இந்த வழக்கிலும் ராகுலின் கழுத்தில் சுருக்கு கெட்டியாக, இறுக்கமாக இறுகுகிறது. இப்போது.. கொதிக்கும் எண்ணையா.. இல்லை நேரடியாக அடுப்பா என்பதை ராகுல் முடிவு செய்ய வேண்டும்..!
ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில்.. பின்னர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment