Sunday, October 1, 2017

கட்சியை நடத்த வருமானம் இருந்தால் தானே எங்ககிட்ட மோதுவீங்க..!! ஒரு உத்தரவால் மன்னார்குடிகும்பலின் அனைத்து ஆர்டர்களும் ரத்து..!! சிறையில் இதை அறிந்த சசிகலாவின் நிலை?

தமிழக அரசின்  டாஸ்மாக் நிறுவனம், மன்னார் குடி கும்பலுக்கு  (சசிகலா குடும்பத்துக்கு) சொந்தமான, மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து, மது வகைகள் கொள்முதல் செய்வதை, அதிரடியாக குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது..
சரி  இப்படி செய்வதனால் மன்னார் குடி கும்பலுக்கு அரசியல் ரீதியாக என்ன பிரச்சனை?
கட்சியை நடத்த வருமானம் இருந்தால் தானே எங்ககிட்ட மோதுவீங்க..!! ஒரு உத்தரவால் மன்னார்குடிகும்பலின் அனைத்து ஆர்டர்களும் ரத்து..!! சிறையில் இதை அறிந்த சசிகலாவின் நிலை?
தமிழக அரசின், டாஸ்மாக் அமைப்பு  மன்னார் குடி கும்பலுக்கு சொந்தமான மிடாஸ் உட்பட,
11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், இதர  ஏழு நிறுவனங்களிடம் இருந்து பீர் வகைகளையும் கொள்முதல் செய்து கொண்டு இருந்தது..
கொள்முதல் செய்த 11 நிறுவனங்களில்  மிடாஸ் நிறுவனம்,மன்னார் குடி கும்பலுக்கு சொந்தமானது.
அந்த காரணத்தால் மட்டுமே அந்நிறுவனத்திடம் இருந்து தான் டாஸ்மாக் அமைப்பு அதிகளவில் மது வகைகளை வாங்கியது..
ஜெயலலிதா இறப்பிற்கு பின்னரும், இது தொடர்ந்தது. ஆனால், அ.தி.மு.க., பிளவுபட்டுசசிகலா, சிறையில் அடைக்கப்பட்டார். தினகரனுக்கும் முதல்வருக்கும் பல மோதல்கள் ஏற்பட்டுள்ளன..
இதையடுத்து மறைமுகமாக சசிகுடும்பத்திற்கு ஆப்பு வைக்க சசியின் மிடாஸ் ஆலையில் இருந்து, மது வகைகள் வாங்குவதை குறைக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மிடாஸ் நிறுவனம், மது வகைகள் மட்டுமே சப்ளை செய்கிறது.  மிடாஸ் நிறுவனத்திடம் இருந்து மட்டும், 12 லட்சம் பெட்டிகள் வாங்கப்படும்.
ஒரு மதுபான பெட்டியின் சராசரி விலை, 4,800 ரூபாய். அப்போது மிடாஸ் நிறுவனத்தின் வருமானத்தை கணக்கு போட்டு கொள்ளுங்கள்..
தினகரனுக்கும் முதல்வருக்கும்  மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ளார்..
ஒட்டுமொத்தமாக வாங்குவதை முழுவதுமாக நிறுத்தினால், அதற்கு எதிராக, நீதிமன்றத்தில் மிடாஸ் நிறுவனம் வழக்கு தொடர அதிக  வாய்ப்புள்ளது.
அதற்கு இடம் தராத வகையில், படிப்படியாக குறைக்க முதல்வர் உத்தரவை பிறப்பித்துள்ளார்..
அது மட்டுமின்றி மிடாஸ் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் தற்போது கணிசமாக குறைந்துள்ளது.. இது மிடாஸ் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் தான்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...