ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலாவை அனைவரும் விரமர்சிப்பது உண்டு. ஜெயலலிதாவை பயன்படுத்திதான் சசிகலா சொத்துக்களை குவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரம் மட்டும் அல்ல பொதுமக்களும் கூட பொதுவாக குற்றம்சாற்றுவார்கள்.
ஜெயலலிதா இறந்த பிறகு தொண்டர்கள் விரக்தியில் இருந்தார்கள்.
ஆனால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் சசிகலாவிடம் சரண்டர் ஆகி இருந்தனர்.
அதற்கு காரணம், சசிகலாவிடம் உள்ள அளவிற்கு அதிகமான பணம் தான் என்று அரசியல் வட்டாரத்தில் கூறினார்கள்.

இந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மருது அழகுராஜ் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
சசிகலா குடும்பம் எங்கே போய் உழைத்து கோடிகோடியாக சம்பாதித்தார்கள்?
ஜெயலலிதாவின் அதிகாரத்தை பயன்படுத்தி, தவறான வழியில்தான் இவர்கள் கோடி கோடியாக குவித்துள்ளார்கள்.
இவர்களால்தான், ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று மருது அழகுராஜ் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment