Friday, May 3, 2019

136 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த விமானம்.

அமெரிக்காவில் 136 பயணிகளுடன் சென்ற விமானம் ஆற்றில் பாய்ந்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பி உள்ளனர்.


புளோரிடாவில் ஜாக்சன்வேலி பகுதியில் 136 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி அருகில் உருந்த செயிண்ட் ஜான்ஸ் ஆற்றில் பாய்ந்தது. இதில் காயங்கள் ஏதுமின்றி பயணிகள் உயிர் தப்பி உள்ளனர். இந்த ஆற்றின் முடிவில் விமான நிலைய ரன்வே துவங்குகிறது. இதனால் தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமானம் ஆற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது.




இது குறித்து ஜாக்சன்வேலி மேயர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிருடன் உள்ளனர். ஆற்று நீரில் விமான எரிபொருள் கலப்பதை தடுக்கும் பணியில் விமானநிலைய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விமானம் நீரில் மூழ்கவில்லை. அதனால் பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் விபத்திற்குள்ளான விமானத்தின் 2 போட்டோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...