23.05.2019 - மாலை 6.00 மணி
கோபாலபுரம் திமுக ஆட்டோ ஸ்டாண்டு:
" அண்ணே..டில்லி சட்டசபை எலக்சன்ல திரும்பவும் மோதி ஜெய்ச்டாராமில்ல"
" அது சட்டசபை இல்லடா... டுபுக்கு...பாராளுமன்ற எலக்சன்"
" ஏதோ ஒண்ணுன்ணே... அதெப்டி மோதி திரும்ப திரும்ப கெலிக்கறான்.. உனக்கு தெரியுமாண்ணே ? "
" ஆமாண்டா..அதாண்டா புரில.. டிமானிடேசன், ஜிஎஸ்டி, மல்லயா, பெட்ரோலு, நிரவு,டீசலு, ராபேலுன்னு எதிர் கட்சிகாரங்களோட சேர்ந்துகினு நம்ம தலீவரும் கூவோ கூவுன்னு கூவினாரு... அப்படியும் மோதியே கெலிக்கரான்.
ஒரே கன்பீஸா இருக்குடா.."
ஒரே கன்பீஸா இருக்குடா.."
" கன்பீஸெல்லாம் ஒண்ணுமில்லண்ணே.... மோதி நம்ம டெக்னிக்கை சுட்டுட்டாண்ணே.."
" அட.. என்னா டெக்னீக் டா அது..?"
" அதாண்ணே..சூடு வக்கிறது..
நாம மீட்டருக்கு சூடு வக்கிற மாதிரி மோதி பய வோட்டு மெசினுக்கு சூடு வச்சிருப்பாண்ணே.. அதான் ஓட்டு அவன் பக்கம் கிறு கிறுன்னு ஏறுதண்ணே.."
நாம மீட்டருக்கு சூடு வக்கிற மாதிரி மோதி பய வோட்டு மெசினுக்கு சூடு வச்சிருப்பாண்ணே.. அதான் ஓட்டு அவன் பக்கம் கிறு கிறுன்னு ஏறுதண்ணே.."
" டேய்..பொத்திகினு இருடா.. எவன் காதிலயாவது விழப்போகுது..அப்பறம் நமக்கு சூடு வச்சிருவானுங்க.."
" அண்ணே.. இதனால் நம்ம தலீவருக்கு ஏதாவது பேஜாராய்டுமாண்ணே.?"
" அதெல்லாம் ஒண்ணும் ஆவாதுடா..
தலீவர் பளமொளி சொல்றதுல கில்லாடி..
தலீவர் பளமொளி சொல்றதுல கில்லாடி..
" இகழ்ச்சி உடையார் ..முயற்சி அடையார்" னு டமாஸ் பண்ணி கழண்டுக்குவாரு..
அப்படியே மோதி கால்ல உழறா மாதிரி பாவ்லா காட்டி அவர் காலுக்கு நடுவில பூந்து மோதி பின்னாடி போய் நிந்துகினு மோதி வால்க ன்னு சொல்லிடுவாரில்ல "
" ஆமாண்ணே.. கரீட்டா சொல்றண்ணே.."
No comments:
Post a Comment