Tuesday, May 14, 2019

முழுசா கெடச்சிருமா?

ஹேய்,
இளநீர் ஈரமா இருக்கு,
இதுல தண்ணி ஊத்தினீங்களா?
இல்லைங்கோ,
தென்ன மரத்துக்கு
தண்ணி விட்டேனுங்க,
வேர்வழியா ஏறி
மட்டை வழியா
இந்த காய்க்குள்ளே பூந்திடுச்சுங்க.
ஆக,
மரத்துக்கு எவ்வளவு
தண்ணி பாய்ச்சுனீங்க?
தோராயமா,
ஒரு முன்னூறுல இருந்து
நாநூறு லிட்டர் தேறுமுங்க.
இந்த இளநீயிலே
எவ்வளவு தண்ணி இருக்கும்?
இதுலே,
இருநூத்தம்பது மில்லி இருக்குமுங்க,
ஆக,
முந்நூறு லிட்டர் தண்ணீர்
விட்டும்,
இவ்வளவு குறைவாக
இருப்பதால்
இதற்கு தார்மீக பொறுப்பேற்று
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
ராஜினாமா செய்ய வேண்டும்.
அட ஏனுங்க,
போன வாரம் அவரும் வந்து
இளநீ குடிச்சாருங்க,
குடிச்சிப்புட்டு
காசையும் குடுத்துட்டு
கம்முன்னு போனாருங்க?
துரைமுருகன் :
இவ்வளவு தண்ணீர் விட்டதில்
இவ்வளவு தான் பலன் கிடைக்கிறது,
ஒரு மரமே
இவ்வளவு ஊழல் செய்யுது,
அப்புறம் மனுஷன் போடுற
திட்டம் மட்டும் ஊழல் இல்லாம
முழுசா கெடச்சிருமா?
ஆக,
எடப்பாடி ஆட்சியில்
மரம் கூட ஊழல் செய்கிறது
என்பது இதன் மூலம்
நிரூபணம் ஆனபடியால்,
ஆக,
ஏனுங்க
மரம் ஊழல் செஞ்சதோ
முரம் ஊழல் செஞ்சதோ,
நான் ஊழல் செய்யலிங்க,
எனக்கான காசக் கொடுங்க.
ஊபீஸ்:
அடி,
யாருகிட்ட காசு கேக்குறே,
கராத்தே மாஸ்டர கூப்பிடு
ரெண்டு ஸ்டெப் போடு,
ஐயோ,
வேணாமுங்க,
இன்னியிலே இருந்து
வியாபாரத்தையே
விட்ருவேனுங்க?
ம்ம்ம்,
அது
அந்த பயம் இருக்கட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...