வெளி மாநிலத்தவர் தமிழகத்தில் வேலை செய்தால் என்ன தப்பு என்று கேட்கும் அறிவாளி சமூகத்திற்கு வணக்கம்.
ஆவளுக்கு வெறும் இந்தி மட்டும் தான் தெரியும். அது தப்பு இல்லை. யாரை எங்கு வைக்க வேண்டும் என்று தெரிய வேண்டும்.
அவசரம் மற்றும் ஆபத்தில் எல்லோர்க்கும் தாய்மொழி தான் வரும்.
நாளைக்கு பெரிய பலிகொடுத்து பெரிய பாடம் கற்றுக் கொள்ள போகிறோமா இல்லை இப்பவே விழித்துக்கொள்ள போகிறோமா.
காவலாளியை எங்கு வைக்க வேண்டும் என்ற தெரியாத ஊரில்...
என்று கூறி கொண்டு....
*தமிழ்மொழி தெரியாத அதிகாரிகளால் குழப்பம்*
மதுரையில் எதிரெதிரே வந்த ரயில்கள்; மொழி புரியாத அதிகாரியால் குழப்பம்: 3 பேர் சஸ்பெண்ட்
மொழிக்குழப்பத்தால் மதுரையில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிர் திசையில் இரண்டு பயணிகள் ரயில் வந்த சம்பவத்தில் ஒரு அதிகாரியின் சாதூர்யத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனாலும் அந்த அதிகாரி உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மதுரை அருகே உள்ள திருமங்கலம் ரயில் நிறுத்தத்தில் நேற்று சிக்னல் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார் மதுரையில் இருந்து நெல்லை நோக்கி செல்லும் ரயிலை அந்த தடத்தில் அனுமதித்துள்ளார்.
இந்த தகவலை கள்ளிக்குடி நிலைய மாஸ்டர் சிவசிங் மீனாவிற்கு செல்போன் மூலம் தெரிவித்து, சிக்னல் கோளாறு இருப்பதால் மதுரை - நெல்லை பயணிகள் ரயிலை மட்டும் தான் அனுப்பி வைத்துள்ளதாகவும் அதே தடத்தில் வேறு ரயிலை அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஜெயக்குமார் தமிழில் இந்த தகவலை கூற எதிர்முனையில் உள்ளவர் புரிந்தும் புரியாததுபோல் சரி எனச் சொல்லி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் கள்ளிகுடி ஸ்டேஷன் மாஸ்டர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அதிகாரி ஜெயக்குமார் தமிழில் கூறியது முழுமையாக புரியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அந்த சமயத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் பயணிகள் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையம் வந்துள்ளது.
அந்த ரயிலைத்தான் அனுப்புமாறு திருமங்கலம் அதிகாரி ஜெயக்குமார் கூறியதாக நினைத்த அவர் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளாமல் அஜாக்கிரதையாக மதுரை - நெல்லை ரயில் வந்து கொண்டிருந்த தடத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை நோக்கி செல்லும் ரயிலை செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் சிவசிங் மீனாவிடம் செல்போனில் பேசியதிலிருந்து ஒருவித சந்தேகத்தில் இருந்த அதிகாரி ஜெயக்குமார் தான் கூறியதை அவர் சரியாக புரிந்துக்கொள்ளவில்லையோ என சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் கள்ளிக்குடி கேட் கீப்பரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார்.
அப்போது கள்ளிக்குடி கேட்கீப்பர் கூறிய தகவல் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது சற்று முன்பு தான் செங்கோட்டை பயணிகள் ரயில் மதுரை நோக்கி சென்றதாக கூறியுள்ளார் கேட் கீப்பர்.
அதிர்ச்சி அடைந்த அதிகாரி ஜெயக்குமார் உடனடியாக திருப்பரங்குன்றம் ரயில் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு இரண்டு ரயில்களையும் நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனால் ஒரேதடத்தில் வேகமாக வந்துக்கொண்டிருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. அதிகாரி ஜெயக்குமாரின் சமயோசித்த அறிவால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனாலும் இதுகுறித்து விசாரணை நடத்திய ரயில்வே அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டதற்காக கள்ளிக்குடி ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் சிவசிங் மீனா, திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், திருமங்கலம் ரயில் நிலைய கண்காணிப்பாளர் முருகானந்தம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment