Monday, May 6, 2019

பேய்..ய ஓட்டறவனுக்கு பேரு பூசாாி.…



எனக்கு பேய்களை பற்றி சில சந்தேகங்கள். இதை தீர்த்து வைப்போருக்கு கீழே உள்ள பேய் படம் பொறித்த வெள்ளி காசுகள் அனுப்பி வைக்கபடும்.
1.பேய்கள் நடந்து வரும்போது ஜல்ஜல் என சலங்கை சத்தம் கேட்கிறது. ஆனால் பேய்களுக்கு கால்கள் கிடையாது என்பது தெரியுமா?
2.பேய்கள் வரும்போது ரூம்களில் உள்ள தொங்கு லைட்டுகள்,திரைச்சீலைகள் வேகமாக ஆடுகிறது. ஏன் பேய்கள் வரும்போது High Speed Pedestal Fan கொண்டு வருமா?
3.பேய்கள் வரும்போது மல்லிகை பூ வாசம் வரும் என்பார்கள். ஏன் அது எப்போது வந்தாலும் மல்லிப்பூ சென்ட் அடித்து கொண்டுதான் வருமா?
4.பேய்கள் என்ன உணவு சாப்பிடுகிறது. ஆரிய வந்தேரி உணவான பானிபூரியா, மறத்தமிழர்களின் உணவான ஜோத்பூர் ஆடு பிரியாணியா?
5.பேய்கள் தங்களுக்குள் என்ன மொழியில் பேசுகின்றன. செம்மொழியிலா? ஆரிய வந்தேரி மொழியிலா? உலகப்பொது மொழியிலா?
6.பெரும்பாலான படங்களில் பெண் பேய்கள் தான் வருகிறது. பேய்களில் ஆணினம் உண்டா? இல்லையா?
7.பெரும்பாலான பேய்கள் தலையை விரித்து போட்டுகொண்டு ஆக்ரோஷமாக வருகின்றன. ஏன் பேய்களில் குதிரைவால் கொண்டை போட்ட, அல்லது இரட்டை ஜடை போட்ட சாந்தமான பேய்கள் கிடையாதா?
8.பழைய பேய்கள் எல்லாம் வெள்ளை சேலையில் தான் வரும். ஏன் இப்போது உள்ள பேய்களாவது சுடிதார், அல்லது லெக்கின்ஸில் வரலாமல்லவா?
9.உலகம் முழுவதும் பேய்களுக்கு ஒரே ஜாதிதானா? இல்லை அவைகளுக்கும் ஜாதி வேறுபாடுகள் உண்டா?
10.பேய்கள் பொழுது போக்குவதற்கு எங்காவது விளையாட்டு மைதானம் உள்ளதா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...