காப்பி பொடி இல்ல....கடை திறக்கல..உன்கிட்ட எக்ஸ்ரா காபி பவுடர் பாக்கெட் இருக்கா என்று அபார்ட்மெண்ட் தோழியிடமிருந்து watsapp மெசேஜ் வந்தது
நான் : இருக்கு..வேணுமா ?..
அவள் : என்ன காபி..?
நான் : கோதாஸ் காபி..
அவள் : ஃபில்டர் ஆர் இன்ஸ்டண்ட் காபி?.
நான் : ஃபில்டர் காபி.
அவள் : 100 கி ஆர் 200 கிராம்ஸ்
நான் : 500 கிராம் பாக்கெட் ..l
அவள் : அய்யோ அவ்ளோ வேணாமே.
நான் : அதான் இருக்கு
அவள் : சரி .சிக்கரி இருக்கா அதுல
நான் : ஆமாம் சிக்கரி போட்ட காபிதான்
அவள் : சிக்கரி நல்லதில்லயே ..சரி எவ்ளோ பெர்சண்டேஜ் சிக்கரி ?
நான் லைட்டா இரிட்டேட் ஆயிட்டு ..தெரிலன்னு பதில் போட்டேன்..
இதெல்லாம் கவனிக்க மாட்டியா..சரி எக்ஸ்பைரி டேட் இருக்கா..ஃப்ரெஷா இல்ல ஓல்ட் பேக்கட்டா ....அவள்
நான் இப்ப செம்ம கடுப்பாயிட்டேன்
என்னிடம் இருந்த காபி பேக்கெட்டை நாலு போட்டோ எடுத்தேன் முன் பக்கம் ..பின் பக்கம் ..கிலோஸ் அப் ல ரண்டு..அனுப்பினேன்..
சிறுது நேரத்துக்கு பின் மெசேஜ் ..குட் ..ஆல் கிலியர்..என் வீட்டுக்காரர அனுப்பறேன் ஒரு பாக்கெட்ட குடுத்து விடு..அப்டியே அந்த பேக்கெட்ல ஃப்ரீ சோப்பு டப்பாந்னு போட்ருக்கு..அதயும் சேர்த்து அனுப்பிடு..
நான் : ஙே
#கொசுறு பேச்சு பேச்சோட இருந்திருந்தா சோப்பு டப்பாவ சேவ் பண்ணிருக்கலாம் போட்டோ எடுத்து வாட்சப்ல அனுப்பி சோப்பு டப்பாக்கு ஆப்பு
அவ்வ்
No comments:
Post a Comment