Sunday, May 12, 2019

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

ஜெயங்கொண்டத்தில் பிரபலமான எண்ணெய் நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு மாவட்ட அதிகாரி திடீர் ஆய்வின்போது அந்த இடமானது மிக மிக அசுத்தமாக மனிதர்களை மட்டுமல்ல மிருகங்கள் கூட நடமாட முடியாத பார்க்க முடியாத சுவாசிக்க முடியாத அளவிற்கு சுகாதார கேடாகவும் அதே சமயம் கச்சா எண்ணெய்,குரூட் ஆயில்,வெஜிடபிள் ஆயில் என்பதை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து. மேலும் பல்வேறு மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்களை சூடுபடுத்தி அதில் இருந்து பிரித்து பாமாயில்லுடன் கலந்து அதை கோல்ட் என்ற வார்த்தையுடன் சூரியகாந்தி எண்ணெய் என்று மக்களை ஏமாற்றி விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் பாமாயில் பாக்கெட்டில் மல்லாட்டை அதாவது கடலை படத்தைப் போட்டு விற்பனை செய்துள்ளனர். மேலும் பாமாயில் என்று கவரில் போடாமல் குக்கிங் ஆயில் என்று போட்டு பாக்கெட்டை விற்பனை செய்துள்ளனர். இதேபோல் பல்வேறு முறைகேடுகள் மற்றும் தொடர்ந்து ஒரு மாதம் அந்த நிறுவனத்தின் எண்ணையை உபயோகபடுத்தினால் நிச்சயம் மரணமுண்டு அந்த அளவிற்கு சுகாதாரக்கேடு மற்றும் பல்வேறு கலப்படங்கள் அடக்கிய அந்த எண்ணெயைத் தான் அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் விலை குறைந்துள்ளது என்று வாங்குகின்றனர் இது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் வணக்கம்.
முதலில் நாம் அனைவரும் ஒன்றை தெரிந்து கொள்ளவேண்டும்.
அரசு அளிக்கும் தர சான்றிதழ் அக்மார்க் எந்த எண்ணெயில் உள்ளது என்று மக்கள் பார்ப்பதே இல்லை. விளம்பரங்களை பார்த்தே வாங்கி உண்கிறோம். மக்கள் நம் மீது தான் முதல் தவறு உள்ளது. இதை வாங்காதே என்று சொல்லுவதற்கு பதில் அக்மார்க் உள்ளதா என்று பார்த்து வாங்குங்கள் என்று சொல்ல வேண்டும்.
.
எனக்கு தெரிந்து ஒரே ஒரு சூரியகாந்தி எண்ணெய்க்கு மட்டுமே அக்மார்க் தர சான்றிதழ் இருந்தது. தற்போது அந்த எண்ணெயை பிரபல நிறுவனம் கைப்பற்றியது. சிறிது காலத்திலேயே அக்மார்க் தர சான்றிதழை அந்த எண்ணெய் இழந்தது.
.
எனக்கு தெரிந்து எந்த சூரியகாந்தி எண்ணெய் க்கும் அரசு அளிக்கும் அக்மார்க் தர சான்றிதழ் இல்லை என்றே எண்ணுகிறேன்.
இல்லை உள்ளது என்றால் தெரிந்தவர்கள் சொல்லுங்கள், அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...