நிதானமாக ஒரு விஷயம் யோசித்துப் பார்க்கிறேன். இன்றைக்கு கமல் பேசியதற்கும் அன்றைக்கு வைரமுத்து
பேசியதற்கும் அடி விழுகிறது ( அடின்னா பலமான எதிர்ப்பை சொல்றேன்).
பேசியதற்கும் அடி விழுகிறது ( அடின்னா பலமான எதிர்ப்பை சொல்றேன்).
சந்தோஷம் தான். சென்ற தலைமுறை போல இல்லாமல் நம் தலைமுறையாவது உணர்வோடு இருந்தால் அதை விட மகிழ்ச்சி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஆனால் இந்துக்கள் திருமண முறைகள் கீழ்த்தரமானவை என்று மு க ஸ்டாலின் பேசியதும், திருப்பதி வெங்கடாசலபதி குறித்து கனிமொழி பேசியதும் இதே காலகட்டத்தில் தான். சில முணு முணுப்புகள் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. இந்த உணர்வு அப்போதெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை.
அதைப்பற்றி சிறிது சிந்தித்து பார்த்தால் இரண்டு தரவுகள் தான் கிடைக்கின்றன.
ஒன்று, பலம் வாய்ந்த எதிரியிடம் அடங்கிப் போய் விட்டு புள்ளபூச்சியை அடித்து விட்டு மார் தட்டிக் கொள்கிறோமா?
இல்லையெனில் ஸ்டாலின், கனிமொழியை விட வைரமுத்துவும் கமலஹாசனும் தான் பெரிய ஆட்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோமா?
உங்களுக்கு என்ன பதில் தோன்றுகிறது என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு தோன்றுவது இதுதான்.
எல்லா வெறுப்பு பேச்சுகளையும் எதிர்க்க வேண்டும். மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பெரிய எதிரியிடம் பலமாக மோதினால் சில்லறை சில்வண்டுகளுக்கு எல்லாம் வாய் திறக்கவே தைரியம் வராது.
No comments:
Post a Comment