Saturday, May 4, 2019

எஸ்றா சற்குணம் ஆஜராக உத்தரவு.

பெரம்பலுார்:பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், பேராயர் எஸ்றா சற்குணம், வரும், 6ம் தேதி ஆஜராக, பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டம், ஓலைப்பாடி கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் தங்கதுரை, பெரம்பலுார் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், 24ம் தேதி, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பேராயர் எஸ்றா சற்குணம், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோரை இழிவுபடுத்தி பேசியதோடு, அவதுாறாகவும், சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.
எனவே, பேராயர் சற்குணத்திடம் சட்டப்படி விசாரணை நடத்தி, 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கோரியிருந்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி அசோக் பிரசாத், 'பேராயர் சற்குணம், 6ம் தேதி ஆஜராக வேண்டும்' என, உத்தரவிட்டார்.


 எஸ்றா சற்குணம்  ஆஜராக உத்தரவு

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...