Saturday, May 4, 2019

இரசாயன கலப்படம் இல்லாத மாம்பழம்... கண்டறிவது எப்படி?



தாய் பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் உண்டுவிட்டு குழந்தைக்குப் பால் கொடுப்பதை முற்றிலும் தவிறுங்கள்.
கோடை வெயிலையொட்டி மாம்பழங்களின் விற்பனை தொடங்க ஆரம்பித்துவிட்டது. அதன் விற்பனை மற்றும் தேவைக்காக, ஒரு பழம் இயற்கையான முறையில் பழுக்கக்கூட நேரம் அளிப்பதில்லை.
முன்பெல்லாம் விவசாயிகள் மரத்திலேயே பழக்கும் வரை விட்டுப் பறிப்பார்கள் அல்லது காயாக இருக்கும்போதே அதைப் பறித்துத் தனி அறையில் பழுக்க வைப்பார்கள். மாம்பழம் இயற்கையாகப் பழுக்க எத்தலின் என்னும் இரசாயனம் சுரக்கும். அதன்பிறகே அது பழுக்க ஆரம்பிக்கும்.
பழங்களும் விற்பனையின் போது தயார் நிலையில் இருக்கும். ஆனால் இன்றைய அவசரக்காலகட்டம் பழங்களையும் விட்டு வைக்கவில்லை. மாம்பழங்களை எளிதில் பழுக்க வைக்க ரசாயனம் பயன்படுத்தி இரண்டு நாட்களிலேயே பழுக்க வைக்கின்றனர். இதனால் அவை கண்களைப் பறிக்கும் வண்ணத்தில் மக்களை ஈர்க்கிறது. மக்களும் ஏமாந்து வாங்கிவிடுகின்றனர்.
இயற்கையாக பழுக்கப்பட்ட பழம் எவ்வாறு வேறுபடுகிறது என நந்திதா ஷஹா என்னும் ஊட்டச்சத்து நிபுணர் ஹெல்த் சைன்ஸ் பத்திரிகைக்கு அளித்த குறிப்புகளிலிருந்து உங்களுக்காக சில.
Image may contain: fruit and food
”செயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்ணும்போது அவை ஹார்மோன் மாற்றங்களை நிகழ்த்துகின்றன. அதன் விளைவாக ஹைப்போ தைராய்டு, நீரிழிவு நோய், கருப்பைப் பிரச்னை, புற்றுநோய் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மாம்பழம் சாப்பிட்டுவிட்டு குழந்தைக்கு பால் கொடுப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அப்படிக் கொடுத்தால் குழந்தையின் உடல்நிலையை பாதிக்க வாய்ப்புள்ளது” என எச்சரிக்கிறார்.
மாம்பழம் வாங்கியதும் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் போடுங்கள். பழுத்த பழமாக இருந்தால் தண்ணீரில் மூழ்கி அடியில் போகும். மேலேயே மிதந்தால் அது செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழம்.
வண்ணம் : செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களின் தோல்களில் ஆங்காங்கே பச்சை நிறம் தென்படும். இயற்கையான பழத்தில் இப்படி பச்சை நிறம் இருக்காது. அதேசமயம் சீரான மஞ்சள் நிறமும் இருக்காது. அதேபோல் அதன் மஞ்சள் நிறம் வெளிரென இருக்கும். இப்படி இருந்தால் அவை செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட பழங்களாகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...