மக்களுக்கு நன்மைதருவதற்காக ஒரு வேகப் பெருவீதியை உருவாக்கியிருக்கிறது. அது எட்டுவழிச் சாலை அல்ல, எலெக்ட்ரிக் சாலை. சீமென்ஸ் (Siemens) நிறுவனத்தின் உதவியுடன் இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த ‘மின்சாரப் பெருவீதி’ (Electric Highway), நெரிசலான வாகனப் போக்குவரத்து நிறைந்திருக்கும் பிராங்க்பேர்ட் நகரிலிருந்து பத்து கிலோமீட்டர்கள் வரை அமைக்கப்பட்டிருக்கிறது. .
எரிவாயுவை வெளிவிடாமல் பசுமை முறையில் செயல்படுத்தப்படும் முதல் முயற்சி இது. இதன் சாத்தியம் ஆராயப்பட்டு, ஜெர்மனி முழுவதும் படிப்படியாகக் கொண்டுவரப்படும். இந்த மின்சாரப் பெருவீதியில் (eHighway) பாரவண்டிகளே ஓடவிடப்பட்டுள்ளன. அவை மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லக்கூடியதாக அனுமதிக்கப்பட்டுள்ளது.
அணுவுலைகளைப் படிப்படியாக மூடுவோம் என்று வாக்களித்திருந்தது ஜெர்மனி. அதன்படி அவற்றை மூடுவது மட்டுமில்லாமல், காற்றாலை, சூரியஒளி போன்ற பசுமை மின்சாரத்தை மிகையாகத் தயாரித்து சாதனையும் புரிந்திருக்கிறது.
சாலைகள் அமைப்பதில் தப்பில்லை. ஆனால், அவை எவை என்ற தேர்வு தெரிந்தாலே போதும்...


No comments:
Post a Comment