Thursday, May 16, 2019

தேர்தலுக்கு பின் ஆறு அமைச்சர்களுக்கு ஆப்பு !

அமமுகவுக்கு தேர்தல் நிதி கொடுத்த அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியான தகவல்: ''லோக்சபா, 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., தினகரனுக்கு, அஞ்சு அமைச்சர்கள் தேர்தல் நிதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது உளவுத்துறை மூலம் முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு எட்டியுள்ளது. இதனால், அதிர்ச்சியான முதல்வர், தேர்தல் முடிவு வந்ததும், அந்த அஞ்சு பேருக்கும், 'கல்தா' தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.





அதேபோல், வரும், 19ம் தேதி இடைத்தேர்தலுக்காக, அரவக்குறிச்சி தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு பெண் அமைச்சர், தன்னிடம் பணம் இல்லை. கட்சி காசு கொடுத்தால் செலவு செய்கிறேன் எனக்கூறியுள்ளார். இதுவும் முதல்வருக்கு எட்டியுள்ளது. இதனையடுத்து, அவர்களிடம் பணம் கேட்க வேண்டாம். கட்சி தலைமையில் இருந்து செலவு செய்யலாம் எனக்கூறியுள்ளார். இதனால், தேர்தல் முடிந்ததும், அந்த பெண் அமைச்சர் பதவிக்கும் ஆபத்து வரலாம் எனக்கூறப்படுகிறது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...