Monday, May 20, 2019

கருத்துக்கணிப்புகள் - ஒரு அலசல் - தமிழ்நாடு - பயம்வேண்டாம்.

குறைந்தபட்சம் 20 எம்பிக்குமேல்,அதிகபட்சம் 38, அசெம்பிளி குறைந்தபட்சம் 12க்குமேல்,அதிகபட்சம் 18
அகில இந்திய அளவில் கருத்துக்கணிப்பு ஓரளவு ஒத்துப்போகும். ஆனால் தமிழ்நாட்டில் கருத்துக்கணிப்புக்கள் சரியாக இருக்காது. இதன் காரணம் என்ன? இது எம்ஜிஆர் காலத்திலிருந்து தவறாக போக ஆரம்பித்துவிட்டது. பார்லிமெண்ட் தேர்தலில் அவர் மோசமாக தோற்கிறார். ஆனால் அசெம்பிளி தேர்தல் எம்ஜிஆர் உறுதியாக தோற்றுவிடுவார் என்ற நிலைதான். அவர் ஒரு சின்னக்கூட்டணிதான் வைத்தார். காங்கிரஸ் இந்திரா, திமுக கருனாநிதி மெகா கூட்டணி. இன்றும் மேங்காட்டுப்பொட்டலில் எம்ஜிஆர் அவர்கள் பேசியது என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்தத்தேர்தலில் எம்ஜிஆர் தோற்பார் என்றனர். அவர் அமோகமாக வெற்றி பெற்றார். அதற்கு பிறகு நடந்த தேர்தலில் தேர்தலில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி வந்தது. அப்போழுதும் கூட திமுக வெற்றிபெற்றது அதிமுக கட்சியின் ஒற்றுமையின்மையாலும், ஊடகங்கள் மூலமாகவும் ஜெயித்தார்கள். ஜெயலலிதா அவர்கள் வாஜ்பாயுடன் கூட்டணி வைத்தபொழுதும், பிறகு அவர் அசெம்பிளி தேர்தல் வெற்றிபெற்ற போதும், ஏன் போன பார்லிமெண்ட் தேர்தல்போதும் ஒருமுறை கூட ஜெயலலிதா நல்ல மெஜாரிட்டியுடன் வருவார் என்ற கணிப்பை ஒருவார்கூட கூறவில்லை. ஆதலால் இப்போதுகூட இந்ததேர்தலில் திமுக அலை ஸ்டாலின் அலை என்றெல்லாம் கிடையாது. அதிமுக பிளவாகிவிட்டது, தினகரன் பிரித்துவிடுவார்,கமல் உள்ளார், சீமான் உள்ளார் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் மெளனமாக மோடி அலையும்,எடப்பாடி அலையும் தமிழ்நாட்டில் உள்ளது. மற்றொன்று தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்கள்போல் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத்தெரியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...