Monday, May 20, 2019

கமலஹாசனும்தான் தன்னை ஒரு நடிகன் என்று பீற்றிக்கொள்கிறார்😊

மதுரை கம்பம் தொகுதி இடைத்தேர்தல். ( கம்பம் நடராஜன் இறந்ததால் வந்த இடைத்தேர்தல் )
1979அல்லது 80என்றுநினைக்கிறேன். தி.மு.க சார்பில் கம்பம் நடராஜன் தம்பி ராமகிருஷ்ணன் , அ.தி.மு.க. சார்பில் R.D.ஜக்கையன் போட்டி.
பிரச்சாரத்திற்காக இடைத்தேர்தலுக்கு பத்து , பதினைந்து நாட்களுக்கு முன் மதுரை ஹோட்டலில் தங்கியிருந்த எம்.ஜி.ஆர். அவர்கள் தொகுதி நிலவரம் பற்றி தொண்டர்களிடம் விசாரிக்கிறார். கம்பம் நடராஜன் தொகுதியில் செல்வாக்கு மிக்கவர், அவரின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருப்பதாக அறிகிறார். இதை ஏன் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று அவர்களை கடிந்து கொள்கிறார்.

பிரச்சாரத்தின் போது கம்பம் நடராஜன் மிக நல்லவர் , மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் போட்டி எனக்கும் கருணாநிதிக்கும் தான். ராமகிருஷ்ணன்கும் ஜக்கையனுக்கும் இல்லை. அதனால் என்னை வெற்றி பெற வைக்க ஜக்கையனுக்கு வாக்களிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
அதுவரை இருந்து வந்த சூழல் மாறி ஜக்கையன் அமோக வெற்றி பெற்றார். தனது செல்வாக்கால் சூழ்நிலையை மாற்றிய தலைவர்கள் இப்போது இல்லை. பணத்தைக் காட்டி வியாபாரம் செய்யும் தளமாக மாறிவிட்டது இன்றைய தேர்தல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...