Thursday, May 23, 2019

அ.தி.மு.க.,வினர் நிம்மதி அடைந்துள்ளனர்..

தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தலில், தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், அ.தி.மு.க., ஆட்சிக்கு ஆபத்து இல்லை. ஆட்சியை தக்கவைக்க தேவையான இடங்கள் கிடைத்துள்ளதால் முதல்வர் பழனிசாமி ஆட்சி தப்பியது. அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுத்தால் மட்டுமே தி.மு.க.,வால் ஆட்சியை கவிழ்க்க முடியும். இதனால் அ.தி.மு.க.,வினர் நிம்மதி அடைந்துள்ளனர்.

தமிழக சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க.,விற்கு சபாநாயகரை சேர்த்து, 114 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தி.மு.க.,விற்கு, 88; கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒன்று என, 97 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். தினகரன், சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், 21 தொகுதிகளில் வெற்றி பெற்றால், தி.மு.க., ஆட்சியை பிடிக்கும் 
வாய்ப்பு இருந்தது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், அறந்தாங்கி - ரத்தினசபாபதி, விருத்தாசலம் - கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - பிரபு ஆகியோர், தற்போது, தினகரன் ஆதரவாளர் களாக உள்ளனர். அ.தி.மு.க., சின்னத்தில் வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ.,க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், அ.தி.மு.க., விற்கு எதிராக உள்ளனர்.அவர்களை தவிர்த்து, அ.தி.மு.க., பெரும்பான்மை பெற, ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை ஏற்பட்டது. நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அ.தி.மு.க., ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.


அதனால், அ.தி.மு.க.,வை விட, கூடுதல் இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. தேர்தலில், தினகரன் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளது. எனவே, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், மூன்று பேரும், ஆட்சிக்கு எதிரான மனநிலையை மாற்றிக் கொள்ளவும், அவர்களை தகுதி நீக்கம் செய்யும் முடிவை, அ.தி.மு.க., கைவிடவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்படா விட்டால், அ.தி.மு.க., பெரும்பான்மையுடன், ஆட்சியை தொடரும். அவர்களை தகுதி நீக்கம் செய்தாலும், ஆட்சியை தொடர முடியும். 


அதே நேரத்தில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில் சிலரை, தி.மு.க., தங்கள் வசம் இழுத்து, பதவியை ராஜினாமா செய்ய வைத்தால் மட்டுமே, முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும் வாய்ப்பு ஏற்படும்.எனவே, தற்போதைய நிலையில், அ.தி.மு.க., அரசுக்கு, எவ்வித பாதிப்பும் இல்லை.

நாங்குநேரிக்கு இடைத்தேர்தல்!

நாங்குநேரி தொகுதி, காங்கிரஸ் - எம்.எல்.ஏ., வசந்தகுமார், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றுள்ளார். 

இதன் காரணமாக, அவர் தன், எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்வார். அந்தத் தொகுதி காலியாவதால், விரைவில், இடைத்தேர்தல் நடத்தப்படும். காங்கிரஸ் கட்சி, ஒரு எம்.எல்.ஏ.,வை இழப்பதால், அதன் பலம், ஏழாக குறையும்; தி.மு.க., கூட்டணியின் பலமும் குறையும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...