புதுக்கோட்டை அருகே, ரோந்து போலீசார், மது அருந்த, தண்ணீர் பந்தலில் இருந்த டம்ளர்களை திருடியது குறித்து, விசாரணை நடக்கிறது.
புதுக்கோட்டை, மேற்பனைக்காடு பள்ளிவாசல் அருகே, இளைஞர்களால் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் பந்தலில் வைக்கப்படும் எவர்சில்வர் டம்ளர்கள், அடிக்கடி காணாமல் போயின. 20க்கும் மேற்பட்ட டம்ளர்கள் காணாமல் போனதால், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை, இளைஞர்கள் ஆய்வு செய்தனர்.அப்போது, தினமும் அப்பகுதியில் ரோந்து வரும் போலீசார், மது அருந்த, பந்தலில் இருந்த டம்ளர்களை திருடி செல்வது தெரிந்தது.
இது தொடர்பான வீடியோ பதிவு, நேற்று காலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது குறித்து, இளைஞர்கள், கீரமங்கலம் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், இரவு ரோந்துப் பணிக்கு சென்ற கீரமங்கலம் போலீஸ்காரர் அய்யப்பன், 30, ஊர் காவல்படையைச் சேர்ந்த வடிவழகன், 31, ஆகியோர், டம்ளர்களை திருடியது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment