குணாவில் அபிராமி பட்டர் பைத்தியம் என்பதில் தொடங்கி உத்தமவில்லனின் நரசிம்மரை வதம் செய்துவிடுகிற இரணியன் வரை இந்துக்களை முடிந்த வரை அவமானப்படுத்தினீர்கள்.உங்களை நாங்கள் தடுத்து நிறுத்தவில்லை கமல் அவர்களே!.
உங்களுக்கான படைப்பு சுதந்திரத்தை முழுவதுமாக நாங்கள் மதித்தோம்.ஆனால் விஸ்வரூபத்தில் உங்கள் சுதந்திரம் இங்கு என்ன என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அன்றும் இந்துக்கள்தான் உண்மையான சகிப்புத்தன்மை மிக்கவர்கள் என்று சொல்ல உங்களுக்கு நேர்மையில்லை.உங்கள் மீது எனக்கு வருத்தமில்லை சொந்த வீட்டை கொளுத்துகிற இந்த நூற்றாண்டின் கோழைகள் ஒருவரோ,இருவரோ அல்ல என அறிவேன்.
எங்கள் சகிப்புத்தன்மையை எப்படியும் கிழித்தெறிந்து அறுத்து வீசி சிரித்தபடியே இன்னும் எத்தனை பேர் வேண்டுமானாலும் அரசியல் செய்யுங்கள்.எதிர்கொள்ளும் வல்லமையை எங்களுக்கு இந்த யுகமே வழங்கும்.நிற்க.
கோட்சேவை சுதிந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றிருக்கிறீர்கள். உண்மையில் மனதார ஏற்கிறன்.காந்தியை படுகொலை செய்தவன் நிச்சயம் தீவிரவாதிதான்.ஆனால் தான் நம்புகிற ஒன்றிற்காக அதற்கு எதிரி யாரென்று அவன் கருதுகிறானோ அவரை மட்டும் கொலை செய்தான் கோட்சே.எந்த அப்பாவிகளையும் கொலை செய்யவில்லை.
இஸ்லாமியர் கூட்டத்தில் வாக்கு கேட்கும் போது கோட்சேவை இந்து தீவிரவாதி என்றீர்களே திரு.கமல் அவர்களே.அங்கே பிரபாகரனை தீவிரவாதி என்றோ? அல்லது போராளி என்றோ பேச உங்களுக்கு திராணி உள்ளதா? அல்லது தமிழகத்தில் எந்த மூலையிலாவது பேச முடியுமா உங்களால்? உன்னைப் போல் ஒருவனில் நீங்கள் கேட்டதுதான் இன்னும் எத்தனை நாள் இந்த இந்து முஸ்லீம் விளையாட்டை நீங்கள் விளையாடப் போகிறீர்கள்.
No comments:
Post a Comment