Sunday, May 12, 2019

மே, 23 வரை பதில் அளிக்க மாட்டேன்.

''எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, மே, 23 வரை பதில் அளிக்க மாட்டேன்,'' என, தலைமை தேர்தல்ஆணையர், சுனில் அரோரா கூறினார்.
தேர்தல் ஆணையர், சுனில் அரோரா,




லோக்சபா தேர்தல், ஏழு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கும் டில்லியில் உள்ள, ஏழு லோக்சபா தொகுதிகளுக்கும், நேற்று தேர்தல் நடந்தது.முற்றிலும் பெண் ஊழியர்களே பணியாற்றும் வகையில், 'பிங்' ஓட்டுச்சாவடிகளையும், டில்லியில் தேர்தல் ஆணையம் அமைத்திருந்தது.ஏழு லோக்சபா தொகுதி களில், மொத்தம், 17, 'பிங்' ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.



புதுடில்லி லோக்சபா தொகுதி, நிர்மான் பவன் ஓட்டுச்சாவடியில், தலைமை தேர்தல் ஆணையர், சுனில் அரோரா, தன் மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார்; இங்கு அமைக்கப்பட்டிருந்த, பிங்ஓட்டுச்சாவடியை அவர் பார்வையிட்டார்.


பின், சுனில் அரோரா கூறியதாவது:'பிங்' ஓட்டுச்சாவடியில் ஓட்டளித்தது, புதிய அனுபவமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. டில்லி தலைமை தேர்தல் அதிகாரி சிறப்பாக செயல்பட்டுள்ளார்.தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவது பற்றி, மே, 23 வரை பதில் அளிக்க மாட்டேன்.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படுவதை, தவிர்க்க முடியாது; அந்த இயந்திரங்கள், உடனடியாக மாற்றப்படுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...