Saturday, May 18, 2019

கேபினட் செயலர் ஆகிறார் கிரிஜா?

அடுத்து ஆட்சி அமைக்கப் போவது, மீண்டும், பா.ஜ., கூட்டணியா அல்லது காங்கிரஸ் கூட்டணியா என, அரசியல் வட்டாரங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கின்றன. ஆனால், டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில், எந்தெந்த அதிகாரிகளுக்கு முக்கிய பதவிகள் கிடைக்கும் என, பட்டிமன்றம் நடந்து வருகிறது.

கேபினட் செயலர், கிரிஜா வைத்தியநாதன், தோவல், மோடி
மத்திய அரசு அதிகாரிகளில், சக்தி வாய்ந்தவர், கேபினட் செயலர். அனைத்து செயலர்களுக்கும், 'பாஸ்' இவர் தான்.இப்போது, பிரதீப் குமார் சின்ஹா, கேபினட் செயலராக உள்ளார். இவர் பதவி ஓய்வு பெற்றுவிட்டாலும், இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில், பதவி நீட்டிப்பு முடிவடைகிறது.இந்த பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரி, மத்திய அரசின் இரண்டு முக்கிய துறைகளில் பணியாற்றியவராக இருக்க வேண்டும். அடுத்து அமைய இருக்கிற அரசு, முதலில், இந்த பதவிக்கு சிறந்த, மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். இப்போது, தேசிய அளவில், மூத்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருப்பவர், தமிழக தலைமைச் செயலர், கிரிஜா வைத்தியநாதன். இவருக்கு, கேபினட் செயலர் பதவி கிடைக்குமா என, டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால், இவர் மத்திய அரசுப் பதவிகளில், அதிகமாக பணியாற்றியதில்லை என, சொல்லப்படுகிறது.
இதைத் தவிர, உளவுத்துறை தலைவர், 'ரா' அமைப்பின் தலைவர் என, முக்கிய பதவிகளுக்கான அதிகாரிகளையும், புது அரசு நியமிக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி, மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இப்போது, அஜித் தோவல், இந்த பதவியில் உள்ளார். மோடி, மீண்டும் பிரதமராக வந்தால், தோவல் மாற்றப்படலாம் என, அதிகாரிகள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...