அயோத்தியில், சர்ச்சைகுரிய நிலம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்றுநடக்கிறது.உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்ச்சைக்குரிய நிலம், யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண, உச்ச நீதிமன்றம் முடிவுசெய்தது.
இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி, இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர், ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய மத்தியஸ்த குழுவை அமைத்தது.மத்தியஸ்த குழு, எட்டு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்நிலையில், மத்தியஸ்த குழுவினர், தங்களின் இடைக்கால அறிக்கையை, சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பித்துள்ளதாக, உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.இதையடுத்து, அயோத்தி வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன், இன்று நடக்கிறது.
No comments:
Post a Comment