திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று (மே 03) திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

சமீப காலமாக இந்து கடவுள்களையும், இந்துக்களின் சடங்குகளையும் மிக கடுமையாக விமர்சித்தும், கேலி செய்தும் பேசி வருகிறார் ஸ்டாலின். அவரது சகோதரியான கனிமொழியும் இந்துக்களை கிண்டல் செய்து பேசி வருகிறார். ஆனால் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த துர்கா ஸ்டாலின், கோயில் கோயிலாக சென்று சிறப்பு பூஜைகள் செய்து, சாமி தரிசனம் செய்து வருகிறார்.
நேற்று (மே 02) திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகத்தில் பங்கேற்ற அவர் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஆலடி அருணாவின் மகளும், திமுக முன்னாள் அமைச்சருமான பூங்கோதை சென்றிருந்தார்.

தற்போது 4 தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ஸ்டாலின். நேற்று ஒட்டப்பிடாரத்தில் பிரசாரம் செய்த அவர், இன்று திருப்பரங்குன்றத்தில் வீதிவீதியாக சென்று பிரசாரம் செய்தார். 16 கால் மண்டபம் பகுதி, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று, திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்ட ஸ்டாலின், அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து ஓட்டுக் கேட்டார்.
திருப்பரங்குன்றத்தில் கோயில் வீதிகளில் அவர் ஓட்டுக் கேட்டு சென்ற சிறிது நேரத்திலேயே அங்கு காரில் வந்த துர்கா ஸ்டாலின், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மதுரை மாவட்ட திமுக பொறுப்பாளர் தளபதியின் குடும்பத்தினரும் உடன் சென்றனர்.
No comments:
Post a Comment