திதி மற்றும் வார தினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும்.
விரதங்களை கடைபிடிப்பதால் மேல் நிலையை அடைந்தவர்கள் ஏராளம். கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிலையை அனுசரித்து அதன் அடிப்படையில் விரதமிருந்தால் உடல், மனம் மற்றும் ஆன்மா உயர்நிலையை அடையும் என்கிறார்கள்.
இதில் திதி மற்றும் வார தினங்கள் அடைப்படியில் விரதமிருப்பது என்பது முக்கியமானதாகும். ஏகாதசி, சஷ்டி, சதுர்த்தி போன்ற திதிகளிலும் மற்றும் திங்கள் (சோம வாரம்) , வியாழன் (குருவாரம்) போன்ற வாரநாட்களிலும் விரதமிருப்பது நன்று. திதிகள் என்பது 15 நாளுக்கு ஒருமுறை வரும்.
மாதத்தில் 2 முறை விரதம் இருப்பது நமது உடல் நலத்திற்கு மட்டும் அல்ல மனநலத்தையும் வளர்க்கும். சிலர் வட இந்தியாவில் கடைபிடிப்பதுண்டு. சந்திரன் 15 நாள் வளர்பிறையாகவும் பின்பு 15 நாள் தேய்பிறையாகவும் இருப்பதை வைத்து விரதம் அனுஷ்டிக்கிறார்கள். உதாரணமாக முதல் திதி அன்று ஒரு கவளம் சாப்பாடு, 2ஆம் திதி அன்று இரு கவளம் சாப்பாடு என உயர்த்தி பௌர்ணமி அன்று முழு சாப்படு சாப்பிடுவார்கள்.
இதேபோல அடுத்தநாள் ஒரு கவளம் சாப்பாடு குறைத்துக் கொண்டே வந்து அமாவசை அன்று ஒன்றும் சாப்பிட மாட்டார்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் செயல்படுத்துகிறார்கள். ஆனால் வேத சாஸ்திர ரீதியில் ஏகாதசி விரதித்திற்கு ஓர் முக்கியத்துவம் உண்டு. பகவத்த்கீதையில் பரமாத்மா திதியில் ஏகாதசியாக இருக்கிறேன் என கூறுகிறார்.
ஏகாதசியில் விரதமிப்பது மிகவும் சிறந்தது. சிலர் இதை தவறாக கடைபிடிக்கிறார்கள். ஒன்றும் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல விரதம். இதை முறைப்படி கடைப்பிடிப்பது விரதமாகும். உதாரணமாக ஏகாதசிக்கு முன்பு 3 நாட்கள், பின்பு 3 நாட்கள் என மொத்தம் 7 நாட்கள் விரதம் மேற்கொள்ளவேண்டும்.
முதல் நால் எளிய உணவும், அடுத்த நாள் பழவகைகள் உணவாக எடுத்துக்கொள்ளவேண்டும். மூன்றாம் நாள் பழரசம் மட்டும் பருகவும். அதற்கு அடுத்த நாள் ஏகாதசி அன்று, எந்த உணவும் சாப்பிடாமல் இருந்தால் விரத தினமாகும். அதற்கு அடுத்த தினம் இதே போல படிப்படியாக உணவு முறையை மாற்றவும். இதை கீழே உள்ள அட்டவணை விளக்கும்.,
திதி உணவு முறை :
அஷ்டமி :
எளிய உணவு (பருப்பு மற்றும்
நெய் கலந்த காரமற்ற உணவு)
நவமி :
சமைக்கப்படாத பழம் மற்றும் காய்கறிகள்.
தசமி :
பழரசங்கள், எலுமிச்சை ரசம்
ஏகாதசி கோவில் சென்று துளசி தீர்த்தம்
அருந்தி விரதம்துவங்கவும்
துவாதசி :
பழரசங்கள், எலுமிச்சை ரசம்
திரயோதசி :
சமைக்கப்படாத பழம்
மற்றும் காய்கறிகள்
சதுர்தசி :
எளிய உணவு ( பருப்பு மற்றும்
நெய் கலந்த காரமற்ற உணவு)
இந்த உணவு முறையை கடைபிடிக்கும் சமயம் அந்த நாளில் திதி ஆரம்பிக்கும் நேரத்தை சரிபார்த்து ஆரம்பிக்கவும். ஒருநாளின் பிற்பகுதியில் கூட திதி ஆரம்பிக்கலாம். பஞ்சாங்க உதவியுடன் இதை பின்பற்றவும். இந்த விரத முறை மிகவும் படிபடியாக மற்றும் விஞ்ஞான ரீதியில் அனுகும் முறையாகும். வழக்கமாக திடீரென ஒரு நாள் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் நமது உடல் மற்றும் மனத்தடுமாற்றம் ஏற்படும். இதை தவிர்க்கவே இந்த முறை.
விரத நாளான ஏகாதசி அன்று மவுன விரதம் இருப்பதும் நன்று. மவுன விரதம் இருந்தாலும் 1,5,11 என்ற வீடும் குரு மற்றும் சூரியன் சம்மந்தப்படு வேலை செய்வதால் உடல் மற்றும் ஆன்ம முன்னேற்றம் உண்டு. மேலும் ஏகாதசி அன்று, வளர்பிறை அல்லது தேய்பிறை என எந்த ஏகாதசியானாலும் சூரியனும் சந்திரனும் 120 டிகிரி அதாவது சரியான கோணம் என்ற நிலையில் இருப்பதால் கோள்கள் ரீதியாக இதற்கு முக்கியத்துவம் உண்டு. அன்று நமது உடல் மற்றும் மனது தெய்வ நிலைக்கு(மேல் நோக்கி) செல்ல தயாராகிறது.
நாம் உணவு உட்கொண்டு உணவை ஜீரணம் செய்ய கீழ்நோக்கி இழுப்பது பாவச்செயல் ஆகும். வட இந்தியாவில் இந்த ஏகாதசி விரதம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் அதிக கட்டுப்பாடுடனும் கடைபிடிக்கிறார்கள். ப்ரம்மச்சாரிகள்(18 வயதுக்கு உட்பட்டவர்கள்), சன்னியாசிகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் விரதத்தை கடைபிடிக்க தேவை இல்லை என சாஸ்திரம் கூறுகிறது.
ஒரு முறை ஏகாதசி விரதம் இருந்தால் உங்கள் மனம் மற்றும் உடல் முன்னேற்றத்தை பார்த்து நீங்களே இதை கடைப்பிடிப்பதா அல்லது வேண்டாமா என முடிவுசெய்யலாம். ஒருவர் உடல் சுகமில்லாமல் இருந்தால் எந்த திதியானாலும் மேற்கண்ட முறையில் 7 நாட்கள் விரதம் இருந்தால் நோய் எளிதில் மாத்திரை உட்கொள்ளாமல் குணமாவதை காணலாம்.

No comments:
Post a Comment