முதுகு அல்லது பின்புற வலியுடன் வேலை செய்வதும் ரொம்ப கஷ்டமான செயல். உடல் உழைப்பு அதிகம் தேவைப்படும் கட்டு மானம், தொழிற்சாலை, ஓட்டுனர் மற்றும் செவிலியர் போன்ற பணிக ளில் இருப்பவர்களுக்கு, இதுபோன்ற முதுகு வலி ஏற்படுவது இயற்கை தான். ஆனால், இதுபோன்ற கடுமை யான உடல் உழைப்பு இல்லாமல், அலுவலக ங்களில் வேலை செய்ப வர்களுக்கும், முதுகு வலிப் பிரச்சி னை பெரும் அவஸ்தையைக் கொடுக் கிறது.
.
முதுகு வலி என்று நாம் பொதுவாக சொன்னாலும், தோள்பட்டை,முதுகு, முதுகின் கீழ்ப்பகுதி, பின் புறம் ஏன் கால்கள் வரை கூட வலி இருக்க லாம். எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டு இணை ப்புகள் எவ் வாறு ஒன்றி ணைந்து செயல்படுகின் றன என்பதைப் பொருத்தே ஒருவரு க்கு முதுகு வலி வரும் வாய்ப்புக்கள் இருக்கு ம். இது போன்ற முதுகு வலி வருவதற்கான காரணங்கள் எவை? அவற்றைத் தடுப் பதற்கான வழி முறைகள் என்னென்னஎன்பதைக் கொஞ்சம் பார்ப்போமே..!
முதுகு வலி வருவதற்கான காரணங்கள்:
.
1. ஒரே மாதிரியான வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்வது,தசைகளுக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கும் வகையில் வேலை செய்தல் மற்றும் வசதி இல்லாமல் மாறு பட்ட வகையில் உடம்பை வருத்தி அமர்தல், உறங்குதல் போன் றவையும் முதுகு வலியை உண்டா க்கும்.
.
2. அதிகளவு எடை தூக்கும்போது முதுகுத் தண்டு மற்றும் தசைக ளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர், தவறான முறை யில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வர். இதனாலும் முது வலி ஏற்படலாம்.
.
3. பலவந்தமாக, வேகமாக தள்ளுவது, இழுப்பது, குனிவது, உடம்பைத் வளைப்பது போன்ற செயல்களும் முதுகுப் பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் செயல் களாகும்.
.
4. முதுகு மற்றும் பின்புற எலும்பு களுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் பணிகளைச் செய்வது எலும்புக ளுக்கும், தசை நார்களுக்கும் காயம் ஏற்படுத்தலாம் அல்லது தசைச்சோர்வை ஏற்படுத்தலாம். இதனால் முதுகு வலி ஏற்படும்.
.
முதுகு வலியைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன?
.
1. உடலுக்கு வேலை கொடுப்பது ரொம்ப அவசியம். அவ்வப்போது நடைப்பயிற்சி செய்வது, உடற் பயிற்சி செய்வது போன்றவை முதுகு வலி வராமல் தடுக்கும். அவரவர் உடம்பிற்கு ஏற்றார் போல உடற்பயிற்சி செய்தல் நலம்.
.
2. சாப்ட்வேர் மற்றும் பிற அலுவ லகங்களில் பெரும்பாலும் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டி இருக்கும். அப்படி வேலை யில் இருப்பவர்கள் ஒழுங்காக, நேரான முறையில், வசதியாக அமர்தல் அவசியம். வெகுநேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வ ப்போது வேலை கொடுப்பது நல்லது. அதேபோல, வேறு சில பணிகளில் வெகுநேரம் நிற்க வேண்டி இருக்கும். இவர்கள், அவ் வப்போது கால்களை ஸ்டூல் அல்லது கல் போன்ற பொருட்களின் மீது வைத் துக்கொள்வது எலும்புகளுக்கும், தசைகளுக்கும் நல்லது.
.
3.வலுவான பொருட்களைத் தூக்கும் போது, ஒழுங்கான முறை யில், உடல் ஒத்துழைக்கும் வகையில் தூக்க வேண்டும். உடம்பி ன் இயற்கையான வளைவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். அதற்கு ஏற்றார் போல், நம் பணிகளைச் செய்வது சிறப்பு.
.
4.அவசியமில்லாமல், தவறான முறையில் உடம்பை வளைப்பது, எசக்குபிசக்காக குனிவது, திரும்பு வது போன்ற செயல்களைக் குறை த்துக் கொள்வது நல்லது. முதுகு அல்லது பின்புற வலி சாதாரண மாக ஒரு சில நாட்களில் சரி ஆகி விடும். முதுகு வலி தொடர்ந்து நீடித் தால் மருத்துவரை அணுகி ஆலோ சனைப் பெற்றுக் கொள்வது சிறந்தது.
No comments:
Post a Comment