மூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்! – தெரிந்து கொள்ளுங்கள்
மூளைச்சாவு (கோமா) ஏற்பட என்னென்ன காரணங்கள்! – தெரிந்து கொள்ளுங்கள்
சமீப காலமாக இந்த மூளைச்சாவு பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படிக்கின்றோம். தொலைக்காட்சிகளில்
பார்க்கிறோம். மூளைச்சாவு இதனை ஆங்கிலத்தில் கோமா என்பர். இந்த கோமாவானது என்னென்ன கார ணங்களால் ஏற்படுகிறது என்பதை நாம் தெரியுமா? தெரிந்து கொள்வதற்கான விழிப்புணர்வு பதிவுதான் இது
மனிதர்களுக்கு நேரடியான மூளை பாதிப்புகளாலோ மறைமுகமான வேறு உடற் பிரச்சனைகளாலோ உருவாகலாம்.
காயங்கள்–
மண்டையோட்டினுள்/ மூளையினுள் இரத்தக் கசிவு, மண்டை யோட்டு என்பு முறிவுகள்
நச்சுப்பொருட்கள்–
மிதமிஞ்சிய மதுப்பாவனை, மயக்கமருந்துகள், போதை மருந்துகள், ஓபி யொயிட் / மனநோய் மருந்துகள், தூக்க மருந்துகள், காபனோரொட்சைட் மற்றும் ஏனைய நஞ்சூட்டல் கள்
அனுசேபச்சிக்கல்கள் –
இரத்தக்குளுக்கோஸ் மட்டம் மிகஉயர்தல்/ மிகத் தாழ்தல், இரத்தக் சோடியம் அயனின் அளவு மிக உயர்தல் / மிகத்தாழ்தல், இரத்தக் கல்சியத்தின் அளவு மிக உயர்தல், குருதி அமிலகார சமநிலை மாற்றம், இரத்தத்தில் ஒட்சிசன் அளவு மிகக்குறைதல்
கபச்சுரப்பிக் குறைபாடுகள்
தைரொயிட் சுரப்பு மிகக்குறைதல்
தீவிர ஈரல் நோய்கள்
தீவிர சிறுநீரக நோய்கள்
நரம்பியல் –
வலிப்பு நோய், நிறுத்த முடியாத தொடர்ச்சியான வலிப்பு , தலையோ ட்டினுள் அழுத்த உயர்வு
மூளையினுள் இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தக்கசிவு/இரத்தம் உறைதல்
கிருமித்தொற்று
மூளையமென்சவ்வு அழற்சி, இரத்தத்தில் இரத்தத் தொற்று, மூளையில் இரத்தத்தொற்று, அழற்சி, மூளையில் தொற்றுக் குட்பட்ட சீழ்க்கட்டிகள், மூளை மலேரியா
கட்டமைப்பு குறைபாடுகள்
தலையோட்டினுள் இடத்தினை ஆக்கிரமிக்கும் நோய்களும் அவற்றினால் ஏற்படும் மண்டையோட்டினுள் அழுத்த உயர்வும்.
No comments:
Post a Comment