Friday, May 20, 2016

தமிழக அமைச்சரவை பட்டியல்...

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது.
வரும் 23-ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் முதல்வராக ஜெயலலிதா பதவியேற்கிறார். அவருடன் 32 அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இதுகுறித்த விவரம் பின்வருமாறு

1..ஆர்.கே. நகர் - ஜெ.ஜெயலலிதா- முதல்வர்., உள்துறை, சட்டம் ஒழுங்கு

2.போடிநாயக்கனூர்- ஓ.பன்னீர்செல்வம்-நிதித் துறை
3.மயிலாப்பூர்- ஆர். நடராஜ்.- சட்டம்-சிறைத்துறை.
4. ராயபுரம்- ஆர்.ஜெயகுமார்- மீன்வளம், கால்நடைத் துறை
5.ஆவடி மாபா.பாண்டியராஜன்- தகவல் தொழில்நுட்பம்
6. மதுரவாயல்- பா.பெஞ்சமின்- உள்ளாட்சி, நகர நிர்வாகம்
7. திருத்தணி- பி,எம்.நரசிம்மன் -கூட்டுறவுத் துறை
8. ஜோலார்பேட்டை- கே.சி.வீரமணி- பள்ளிக் கல்வித் துறை
9. செய்யாறு- தூசி கே.மோகன்- பால்வளத் துறை
10. வாணியம்பாடி-நீலோபர் கபீல்- சிறுபான்மையினர் நலன்
11. பாப்பிரெட்டிப்பட்டி- பி.பழனியப்பன் உயர்கல்வித் துறை
12. விழுப்புரம்- சி.வி.சண்முகம்- பொதுப்பணித் துறை
13. உளுந்தூர்பேட்டை-குமரகுரு- மதுவிலக்கு அமலாக்கத் துறை (புதிய துறை)
14, ஏற்காடு- சித்ரா- ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத் துறை
15. எடப்பாடி- கே.பழனிசாமி- தொழிலாளர் நலத் துறை...
16. ராசிபுரம்- சரோஜா- மகளிர் நலன், சமூக நலத் துறை
17. குமாரபாளையம்- கே.டி.தங்கமணி- கைத்தறி, ஜவுளித் துறை...
18. கோபிசெட்டிபாளையம்- கே.ஏ.செங்கோட்டையன்- போக்குவரத்துத் துறை
19. திருப்பூர் வடக்கு- விஜயகுமார்- இந்து சமய அறநிலையத் துறை.
20. தொண்டாமுத்தூர்- எஸ்.பி.வேலுமணி- வேளாண்மைத் துறை
21. பொள்ளாச்சி- வி.ஜெயராமன்- சிறப்பு அமலாக்கத் துறை, வீட்டுவசதித் துறை
22. திண்டுக்கல்- சி.சீனிவாசன்- வருவாய்த் துறை
23. வேதாரண்யம்--ஓ.எஸ்.மணியன்- பத்திரப் பதிவு, வணிக வரித் துறை
24. கடலூர்-எம்.சி. சம்பத்- வனத் துறை
25. நன்னிலம்- காமராஜ்- உணவுத் துறை
26. விராலிமலை-சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை
27. மதுரை மேற்கு-செல்லூர் ராஜு- நீர்ப்பாசனத் துறை
28. திருமங்கலம்-ஆர்.வி. உதயகுமார் - மின்சாரத் துறை
29. சிவகாசி- கேடி.ராஜேந்திரபாலாஜி- செய்தித் துறை
30. உடுமலை- ராதாகிருஷ்ணன்- இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை
31. சிரிவைகுண்டம்- சண்முகநாதன்- கனிமவளத் துறை
32. ராதாபுரம்- இன்பதுரை- சுற்றுலாத் துறை
இதுதவிர, அவினாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ப.தனபால் மீண்டும் சபாநாயகராக பொறுப்பேற்பார் என்றும் துணைசபாநாயகராக மேட்டூரில் வெற்றி பெற்ற எஸ்.செம்மலை பொறுப்பேற்றும் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...