Monday, May 30, 2016

அமெரிக்காவில்...பிரமாண்டான கோவில்!!!

ஓர் இனத்தின் அடையாளத்தை உலகுக்கு காட்டும் முக்கிய அம்சங்களில் கோவில்களும் அடங்கும். உலகின் முக்கிய இனங்களின் தொன்மையை அந்த கோவில்களின் சிற்பங்களிலும் அதன் வரலாற்றையும் கண்டே நாம் பெருமைக் கொள்கிறோம்.

அவ்வகையில் நிலப் பரப்பளவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய கோவிலாக உருவெடுத்து, கூடிய சீக்கிரத்தில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா காணவிருக்கிறது நியூ ஜெர்சியில் உள்ள அக்‌ஷர்தாம் கோவில். 150 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோவில் 162 ஏக்கர் பரப்பளவில் நிமிர்ந்து நிற்கிறது. தற்பொழுது உலகின் மிகப் பெரிய கோவிலாக திகழ்வது தமிழ்நாடு, ஸ்ரீரங்கத்தில் 155.92 ஏக்கர் பரப்பளவில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கசுவாமி கோவிலாகும்.
டெல்லி மற்றும் காந்திநகர் இந்தியாவில் உள்ள கோவில்களின் சாயலில் கட்டப்படும் இந்தக் கோவில் சுவாமி நாராயணின் திருத்தலமாகும். போச்சன்ஸ்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புருசோத்தம் சுவாமி நாராயண் ஷன்ஸ்தா தலமையில் 2013 -ல் தொடங்கப்பட்ட இந்தக் கோவில் தற்பொழுது பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டாலும் இதன் கட்டுமாணப் பணி 2017- இல் தான் முடியும்.
வடக்கு மற்றும் தென் இந்தியாவின் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் ஏறக்குறைய 2.000 சிற்பிகளின் வேலைப்பாட்டில் சிற்பங்களும் தூண்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கைவண்ணங்கள் நியூ ஜெர்சிக்கு கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டன. இவை அனைத்தும் இத்தாலியிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 13,000 பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டவை.
இந்த கோவிலின் முக்கிய கோபுரம் 134 அடி உயரமும் 87 அடி நீளமும் கொண்டது. 108 தூண்களைக் கொண்ட இந்தக் கோவிலில் 3 முக்கிய கற்பக் கிரகங்களும் இந்து சில்பா சாஸ்த்திரத்தின் அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுள்ளன. ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ள இந்த வடிவமைப்பு நியூ ஜெர்சியின் கடும் குளிர் பருவத்தை எதிர்கொண்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கோவிலில், இந்திய வரலாற்றையும் இந்து சமயத்தையும் எடுத்துரைக்கும் தகவல்கள் நிரம்பிய கண்காட்சி கூடமும், இளைஞர்களுக்கான நடவடிக்கை கூடமும் பிரத்தியேகமாக ஒதுக்கப்படுள்ளது.
நியூ ஜெர்சியில் அதிகரித்து வரும் இந்து மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் இந்து சமயத்தையும் இந்தியர்களின் கலச்சாரத்தியும் பிறருக்குத் தெரிவிக்கும் முக்கியச் சுற்றுலாத்தலமாகவும் இது திகழ்கிறது.



No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...