Saturday, May 21, 2016

தன் பலத்தை முழுமையாக நம்பி

அதிமுக 232ல் போட்டியிட்டு 134ல் வெற்றி..அதாவது 58% வெற்றி
திமுக 176ல் போட்டியிட்டு 90ல் வெற்றி..அதாவது 51% வெற்றி
ஆனால் காங்கிரஸ் 41ல் போட்டியிட்டு ஏழுசீட்டுக்களில் தான் வென்றது..அதாவது 17% வெற்றி மட்டுமே
234 சீட்டுக்களிலும் உதயசூரியனே போட்டியிட்டிருந்தால் 51% சீட்டுக்கள் அதாவது 118 சீட்டுக்களை திமுக பெற்றிருக்கும்..அட்லீஸ்ட் இன்னமும் டஃப் பைட்டாக இருந்திருக்கும்.
கணக்குபோட்டால்
திமுக போட்டியிட்ட 176 தொகுதியில் 90 தொகுதிகளை திமுகவும், 86 தொகுதிகளை அதிமுகவும் வென்றன. ஆக அதிமுகவை விட திமுகவே நேரடி போட்டியில் அதிகமாக வென்றுள்ளது
ஆனால் காங்கிரஸ் போட்டியிட்ட 41 தொகுதிகளில் 34 தொகுதிகளை அதிமுக வென்றதால் 86+ 34= 120 என தனிமெஜாரிட்டியை அது தாண்டிவிட்டது. பிற கூட்டணிகட்சி சீட்டுக்களையும் இதேபோல இலை வென்றுவிட்டது
வெற்றிக்கும், தோல்விக்குமான வித்தியாசம் இத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சீட்டுக்களாக அமைந்தது தான் வேடிக்கையான விஷயம். இலையும் சூரியனும் மோதிய தொகுதிகளில் 50, 50 என்ற விகிதத்தில் வெற்றிவாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அந்த 41 தொகுதிகளில் 83% தொகுதிகளை அள்ளியது அதிமுகவை அரியணையில் அமர்த்திவிட்டது
தன் பலத்தை முழுமையாக நம்பி, 234 தொகுதியிலும் இரட்டை இலையை களம்காணவிட்டது அசாத்திய துணிச்சல், ரிஸ்க் என பலவிதமாக கூறபட்டாலும் இறுதியில் அதுவே அதிமுகவுக்கு வெற்றியை தேடிதந்துவிட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...