கோவையின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்று... லக்ஷ்மி மில்ஸ் குழுமத்தை சேர்ந்தது...
கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது , அதற்கு நன்கொடை கேட்டு அப்போதைய திமுக மந்திரி பொங்கலூர் பழனிச்சாமி மிரட்டியதில் பிரச்சினை ஆரம்பித்தது....
அவரும் அவர் மகன் பைந்தமிழ் பாரியும் பிரிகால் நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர்.... உச்சகட்டமாக அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தொழிலாளர்களால் அடித்துக்கொல்லப்பட்டார்... கோவையே அதிர்ந்து போய் நின்றது...
பிரிகால் தலைவர் வனிதா மோகன் கருணாநிதி வரை பிரச்சினையை எடுத்துச்சென்றும் பலன் கிடைக்கவில்லை...கட்சிக்காரர்களை அனுசரித்துச்செல்லும்படி உபதேசம் கிடைத்தது...
ஒரே மாதத்தில் பிரிகால் நிறுவனம் தன் தொழிற்சாலையை உத்தர்கண்ட் மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டது....அந்நிறுவனத்துக்கு சப்ளை செய்து வந்த ஐயாயிரம் வெண்டர்களும் [ சிறு உபரி பாகங்களை சப்ளை செய்பவர்கள்...] , ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் ஒரே நாளில் தெருவுக்கு வந்தார்கள்...
இதுதான் திமுகவினரின் சாதனை..... இந்த ரவுடித்தனத்தால் தான் திமுக திரும்பத்திரும்ப மேற்கு மண்டலத்தில் தோற்கடிக்கப்படுகிறது...
இதை சரி செய்துகொள்ளாமல் , அல்லது அதற்கு முயற்சி செய்யாமல் என்.கே.கே.பி ராஜா போன்ற அடாவடி ஆசாமி களை வைத்துக்கொண்டே அரசியல் செய்து வருகிறது திமுக...
பிறகு எங்கிருந்து வெற்றி கிடைக்கும்..? கொங்கு மண்டலத்தை கரித்துக்கொட்டி என்ன பயன்?
No comments:
Post a Comment