Wednesday, May 11, 2016

திருமதி தர்மா,

தென்னாற்காடு மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார்.
அவர் மரணத்திற்குப் பின்னர் அதே ஊரைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மாம்பாள் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர்.
Image result for karunanidhi with rajathi
இரண்டாவது கணவரும் இறந்து விட்டார். அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை
விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார்.
அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில்
இல்லை.
அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க
முடியவில்லை.
சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும்,இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார்.
திருமதி தர்மாம்பாள் நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார்.
அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார்.
1962ல் மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர். அப்போது தர்மாம்பாளுக்கும், நல்லதம்பிக்கும் அய்யர் வைத்து, அம்மி மிதித்து, அருந்த்திதி
பார்த்து திருமணம் நடந்து முடிந்தது.
1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாம்பாள்,மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து
நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. தர்மாம்பாள் பெயர் ராசாத்தி என்று மாற்றப்பட்டது. அவர் திருமதி.தர்மாம்பாளை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் திருமணம்
செய்து கொண்டார். அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர்.
1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A,திருமூர்த்தி தெருவில்
மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார்.
இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதிராசாத்தி அம்மாளுடன்,அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும்
நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதி, ராசாத்தியை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம்.
அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி ராசாத்தி அம்மாள், சென்னை
இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கினார்.
1960களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி, தொடக்கத்தில் ராஜாத்தி கருப்பையா நாடாராக
இருந்து, அடுத்து ராஜாத்தி முத்துக்குமாரசாமி நாடாராக மாறி, பின்னர் ராஜாத்தி நல்லதம்பியாக மாறி, தற்போது ராஜாத்தி கருணாநிதியாக இருப்பவருக்கு இன்று எத்தனை சொத்துக்கள்.
வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம்,ஊட்டியில் 535 ஏக்கர் தேயிலை
எஸ்டேட், விலை உயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்... இன்னும் எத்தனை எத்தனையோ..


No comments:

Post a Comment