Wednesday, May 11, 2016

சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்


அ.தி.மு.க பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் இன்று சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கழக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார் - 11.5.2016**********************************************************************************
சேப்பாக்கம் தொகுதி:கடந்த ஐந்தாண்டு காலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு உங்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுத்துள்ளது. அந்த வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் அமைதிப் பூங்காவாய் தொடர்ந்திட, ஏழை, எளியோர் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, தமிழகம் வளம் பெற்றிட, வருகின்ற 16-ம் தேதியன்று நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இந்த சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் அனைத்திந்திய அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் நூர்ஜஹானை எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
திருவல்லிக்கேணி தொகுதி:தொடர்ந்து, முதல்வர் ஜெயலலிதா திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, அண்ணா சிலை (மவுண்ட் ரோடு), டேம்ஸ் சாலை, வேல்ஸ் தோட்ட சாலை, காந்தி இர்வின் பாலம், ஈ.வெ.ரா. சாலை, சம்பத் சாலை வழியாக, `சூளை தபால் நிலையம்' வந்தடைந்து, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், எழும்பூர் தொகுதியில் அனைத்திந்திய அ.தி.மு.கபோட்டியிடும் பரிதி இளம்வழுதியை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டார்.
துறைமுகம் தொகுதி :அதனையடுத்து, முதல்வர் ஜெயலலிதா சூளை நெடுஞ்சாலை, முத்தையா தெரு வழியாக யானை கவுனி பாலம், வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு வந்தடைந்து, அங்கு குழுமியிருந்த மக்களிடையே,பேசினார். துறைமுகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எஸ்.சீனிவாசனை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராயபுரம் தொகுதி :பின்னர்,முதல்வர் ஜெயலலிதா வால்டாக்ஸ் ரோடு வழியாக மூலக்கொத்தளம் சந்திப்பு வந்தடைந்து, அங்கு திரண்டிருந்த மக்களிடையே பேசினார். இந்த ராயபுரம் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் ஜெயக்குமார் அவர்களுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெரம்பூர் தொகுதி :தொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா பேசின் பிரிட்ஜ் வழியாக சத்தியமூர்த்தி நகர் வந்தடைந்து, அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசினார். இந்த பெரம்பூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிவேலுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரு.வி.க. நகர் தொகுதி :அடுத்து, முதல்வர் ஜெயலலிதா M.K.B. நகர் சென்ட்ரல் அவின்யூ, டாக்டர் அம்பேத்கர் காலேஜ் ரோடு, பேரக்ஸ் கேட் ரோடு, ஸ்டெரான்ஸ் ரோடு வழியாக ஓட்டேரி பாலம் வந்தடைந்து, அங்கு குழுமியிருந்த மக்களிடையே பேசினார். இந்த திரு.வி.க. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நீலகண்டனுக்கு இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொளத்தூர் தொகுதி :தொடர்ச்சியாக, முதல்வர் ஜெயலலிதா கொன்னூர் நெடுஞ்சாலை வழியாக அயனாவரம் பேருந்து நிலையம் வந்தடைந்து, அங்கு பெருந்திரளாகத் திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். அப்போது அவர் பேசியதாவது, முந்தைய தி.மு.க ஆட்சியில் நீங்கள் பல கொடுமைகளை அனுபவித்தீர்கள். அப்போதிருந்த மின்வெட்டை யாரும் மறக்க முடியாது. அதனால், மக்கள் பட்ட கஷ்டங்களையும் மறக்கவே முடியாது. 10 மணி நேரம், 15 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. மாணாக்கர்கள் படிக்க முடியவில்லை. தமிழகமே இருளில் மூழ்கி இருந்தது. சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருந்தது. நில அபகரிப்பாளர்களால் உங்கள் சொத்துகளும், நிலங்களும் அபகரிக்கப்பட்டன. ஆனால், கடந்த ஐந்தாண்டு காலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க அரசு உங்கள் வாழ்வில் வசந்தத்தைக் கொடுத்துள்ளது. இப்பொழுது தமிழகம் ஒளிமயமாக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டம்-ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. நில அபகரிப்பாளர்கள் மீது காவல் துறையினரால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலங்களும், சொத்துக்களும் உரிமையாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டன. எனவே, இந்த வசந்தம் தொடர்ந்திட, தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூவங்காய் திகழ்ந்திட, ஏழை, எளியோர் தொடர்ந்து ஏற்றம் பெற்றிட, நாடு வளம் பெற, வருகின்ற 16-ம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், இந்த கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் J.C.D.பிரபாகருக்கு, இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட வெற்றிச் சின்னமாம் `இரட்டை இலை' சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வில்லிவாக்கம் தொகுதி :அடுத்து, முதல்வர் ஜெயலலிதா கொன்னூர் நெடுஞ்சாலை, M.T.H. ரோடு வழியாக `ரெட்டித் தெரு சந்திப்பை' வந்தடைந்து, அங்கே குழுமியிருந்த மக்களிடையே, பேசினார். வில்லிவாக்கம் தொகுதியில் அனைத்திந்திய அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாடி.ராசுவுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விருகம்பாக்கம் தொகுதி :அடுத்து, முதல்வர் ஜெயலலிதா நாதமுனி, பாடி மேம்பாலம், 100 அடி ரோடு, கோயம்பேடு ரவுண்டானா வழியாக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தடைந்து அங்கு திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் விருகை V.N. ரவிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மின்வெட்டு, நிலஅபகரிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தி.மு.க ஆட்சியில் மக்கள் அனுபவித்த கொடுமைகள் - முதல்வர் ஜெயலலிதா பேச்சுதொடர்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா விநாயகபுரம் பிரதான சாலை வழியாக MMDA காலனி மார்க்கெட் வந்தடைந்து, அங்கு தம்மைக் காண்பதற்காகத் திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். அண்ணாநகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கோகுல இந்திராவுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆயிரம்விளக்கு தொகுதி :பின்னர்,முதல்வர் ஜெயலலிதா ரசாக் கார்டன் ரோடு, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் ரோடு, லயோலா கல்லூரி, அவின்யு ரோடு வழியாக புஷ்பா நகர் வந்தடைந்து, அங்கு தம்மைக் காண்பதற்காக எழுச்சியுடன் திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். ஆயிரம்விளக்கு தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.வளர்மதிக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தியாகராயநகர் தொகுதி :அதனைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா மகாலிங்கபுரம் மெயின் ரோடு, வடக்கு உஸ்மான் ரோடு வழியாக தியாகராயநகர் பேருந்து நிலையம் வந்தடைந்து, அங்கு பெருந்திரளாகக் குழுமியிருந்த வாக்காளர்களிடையே பேசினார். இந்த தியாகராயநகர் தொகுதியில் அனைத்திந்திய அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்தியநாராயணன் (எ) தி.நகர் சத்தியாவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
சைதாப்பேட்டை தொகுதி :தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா சவுத் உஸ்மான் ரோடு, CIT நகர் 4-வது பிரதான சாலை, அண்ணாசாலை வழியாக சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரே வந்தடைந்து, அங்கு உற்சாக மிகுதியில் திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். சைதாப்பேட்டை தொகுதியில் அனைத்திந்திய அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொன்னையனுக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆலந்தூர் தொகுதி :பின்னர் முதல்வர் ஜெயலலிதா தாலுகா ஆபிஸ் ரோடு, சர்தார் பட்டேல் ரோடு, கிண்டி பாலம் வழியாக அண்ணா சிலை (கத்திப்பாரா சந்திப்பு) வந்தடைந்து, அங்கு திரண்டிருந்த வாக்காளப் பெருமக்களிடையே, பேசினார். இந்த ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வேளச்சேரி தொகுதி :அதன் பின்னர் முதல்வர் ஜெயலலிதா கிண்டி மேம்பாலம், மத்திய கைலாஷ், சர்தார் பட்டேல் ரோடு வழியாக மலர் மருத்துவமனை அருகே வந்தடைந்து, அங்கு தம்மைக் காண்பதற்காக ஆவலோடு திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். இந்த வேளச்சேரி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நீலாங்கரை முனுசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மயிலாப்பூர் தொகுதி :நிறைவாக முதல்வர் ஜெயலலிதா வி.க. பாலம், துர்காபாய் தேஷ்முக் ரோடு, சு.மு. மடம் சாலை வழியாக மயிலை மாங்கொல்லை வந்தடைந்து, அங்கே பெருந்திரளான அளவில் திரண்டிருந்த மக்களிடையே, பேசினார். மயிலாப்பூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நட்ராஜ்-க்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில், மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...