இன்று மதுரையில் இருந்து சென்னை செல்லும் தனியார் பேரூந்துகள் எல்லாம் 2000, 3000 என்று விலை வைத்து விற்கிறார்களே, இதற்கு எதுவும் செய்ய முடியாதா?
எதை ஏலம் விடுவது, எதை முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிப்பது , எதை தகுதியின் அடிப்படையில் அளிப்பது என்பது குறித்து தெளிவான நடைமுறைகள் உள்ளன
உதாரணமாக,
அண்ணா பல்கலைகழகத்தில் இளங்கலை பொறியியல் (B.E., B.Tech.,) மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில் (மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்படவேண்டும்). யார் அதிகம் மதிப்பெண் பெற்றுள்ளார்களோ, அவர்கள் விரும்பிய பாட பிரிவு அவர்களுக்கு வழங்கப்படவேண்டும். அப்படித்தான் நடக்கிறது. அது தான் சரி . . . . யார் அதிகம் பணம் அளிக்கிறார்களோ, அவர்
களுக்கு இடங்கள் வழங்கப்படகூடாது. இடங்களை ஏலம் விட்டால் அரசிற்கு அதிகம் பணம் கிடைக்கும். ஆனால் அது முறையல்ல . . . . அண்ணா பல்கலைகழகத்தில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் அரசிற்கு வருடத்திற்கு இத்தனை கோடி நஷ்டம் என்று யாராவது கணக்கு காண்பித்தால் அதை நம்பி ஏமாறாதீர்கள்
அதே போல்
கல்லூரி விடுதியில் அறைகள் என்பது முதலில் வருபவருக்கு முன்னுரிமை (First Come First Serve) என்ற அடிப்படையிலேயே வழங்கப்படவேண்டும். அப்படித்தான் நடக்கிறது. அது தான் சரி . . . . யார் அதிகம் பணம் அளிக்கிறார்களோ, அவர்களுக்கு கல்லூரி விடுதி அறைகள் வழங்கப்படகூடாது. விடுதி அறைகளை ஏலம் விட்டால் அரசிற்கு அதிகம் பணம் கிடைக்கும். ஆனால் அது முறையல்ல . . . . அண்ணா பல்கலைகழகத்தில் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் ஒதுக்கப்படுவதால் அரசிற்கு வருடத்திற்கு இத்தனை கோடி நஷ்டம் என்று யாராவது கணக்கு காண்பித்தால் அதை நம்பி ஏமாறாதீர்கள்
அதே போல்
விடுதி உணவகத்திற்கு வாங்கப்படும் உணவு மூலப்பொருட்களோ, அல்லது பிற பொருட்களோ ஏலம் அடிப்படையில் வாங்கப்பட வேண்டும். எதை ஏலம் விடுவது, எதை முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அளிப்பது , எதை தகுதியின் அடிப்படையில் அளிப்பது என்பது குறித்து தெளிவான நடைமுறைகள் உள்ளன
அனைத்திற்கும் ஏலம் தான் தீர்வு என்று நினைப்பது மூடத்தனம்
பேரூந்து இருக்கைகள் என்பது முதலில் வருபவருக்கு முன்னுரிமை (First Come First Serve) என்ற வகையிலேயே வழங்கப்படவேண்டும். அது தான் நியாயம். ஏலம் (Auction) விட்டால் பேரூந்து நிறுவனத்திற்கு அதிகம் லாபம் கிடைக்கும். ஆனால் நஷ்டப்படபோவது மக்கள் தான்
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையே தவறு. அந்த முறையே ஊழல். ஏலம் என்பதே சரியான நடைமுறை என்று உங்களை எல்லாம் முட்டாளக்கி, உங்களுக்கு குறைந்த செலவில் சேவைகள் கிடைக்க செய்ததை தவறு என்று சொல்லி, தனியார் பெரு முதலாளிகளுக்கு அதிகம் லாபம் கிடைக்கும் ஏல முறையே சரி என்று உங்களை நம்ப வைத்தார்கள் . . .அதன் நீட்சியே இன்று நீங்கள் 500 ரூபாய் பேருந்து பயணத்திற்கு 3000 கொடுக்க வேண்டி உள்ள நிலை உள்ளது. இந்த பதிவுக்கு சம்பந்தமேயில்லாத 2ஜி பிரச்சினை உங்கள் மூளைக்கு வந்துபோனால் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என அர்த்தம்.
No comments:
Post a Comment