Friday, May 13, 2016

'எங்கே போகிறோம்?'

மகாத்மா காந்தியும் ஜெயப்பிரகாஷ் நாராயணனும் நினைத்திருந்தால் இந்தியாவின் உயர் பதவிகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்தியிருக்க முடியும். சகலத்தையும் சமுதாய நலனுக்கு அர்ப்பணித்த இருவரும் தங்கள் வாழ்வில் ஊராட்சி தலைவர் பதவியில்கூட உட்கார்ந்த்தில்லை. சரித்திர புருஷர்கள் பதவிப் பித்தர்களாக பவனி வந்ததில்லை.
பிரிட்டனின் படியிலிருந்து விடுபடுவதற்கு அமெரிக்க மக்கள் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமையில் போர்க்களம் புகுந்தனர்.. 'பிரிட்டிஷ் ராணுவம் அகிலம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதைவிட வலிமை மிக்க ராணுவம் உலகில் வேறில்லை. அதை எதிர்த்து போரிட்டு உங்களுக்கு வெற்றியைத் தேடித் தருவேன்' என்று வாக்குறுதி வழங்கி அதை வாழ்வில் நீறைவேற்றிக் காட்டியவர் வாஷிங்டன். போர் முடிந்த்து. அமெரிக்க மண்ணில் சுதந்திரக் கொடி பறந்தது. ஆனால் வாஷிங்டன் எந்தப் பதவியையும் எதிர்பாராமல் தன் விளைநிலங்களில் விவசாயம் செய்யப் புறப்பட்டார். மக்களோ அவரை விடவில்லை. அனைவரும் வற்புறுத்தி 1789-ல் வாஷிங்டனை முதல் ஜனாதிபதியாக முடிசூட்டி மகிழ்ந்தனர். தன் பதவிக்காலத்தில் வாஷிங்டன் ஊதியமே பெறவில்லை.
ஜெயலலிதா முதல்வரான போது ஓரேயொரு ரூபாய் ஊதியம் பெற்றது நினைவுக்கு வரும்போதே அவருடைய ஆட்சிக்காலத்து ஊழல் புகார்களும் நினைவுக்கு வரும்.
அமெரிக்க வரலாற்றில் தொடர்ச்சியாக நான்கு முறை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் ஓருவரே. ஐக்கிய நாடுகள் சபை உருவாவதற்கு அடிப்படை அமைத்தவர் ரூஸ்வெல்ட். இருமுறைக்கு மேல் ஓருவர் ஜனாதிபதியாக இருக்க கூடாது என்ற சட்டத்திருத்தம் ஹாரி எஸ் ட்ரூமன் காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. இந்தியாவின் அரசியல் ஓரளவாவது சீரடைய வேண்டுமென்றால் இதுபோன்ற திருத்தம் இன்றே வரவேண்டும்.
யாரும் இரண்டு பதவி காலங்களுக்கு மேல் (10 ஆண்டுகளுக்கு மேல்) பிரதமராகவே, முதலமைச்சராகவே இருக்க முடியாது என்றொரு விதியை இயற்ற வேண்டும். அதேபோல் யாரும் மூன்று பதவிக் காலங்களுக்கு மேல் (15 ஆண்டுகளுக்கு மேல்) நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் தடைவிதித்து சட்டம் இயற்ற வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...