Monday, May 23, 2016

வடிகட்டிய பொய்யும்! வரலாற்றுத் திரிப்பும்!

சந்தடி சாக்கில் வரலாற்று இருட்டடிப்புகளை புகுத்துகிற சாகசக்காரர்கள் தி.மு.க.வினர்!
ஆம்! அப்படித்தான் இப்போதும்கூட பதிமூன்று தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கருணாநிதி என்கிற ஒரு வடிகட்டிய வரலாற்று
திரிப்பை அவர்கள் செய்து வருகிறார்கள்!
1984 தேர்தலிலே கருணாநிதி போட்டியிடவில்லையே. அவர் ஏன்
போட்டியிடவில்லை?
அவர் ஏன் போட்டியிடவில்லை என்றால், அந்தத் தேர்தலிலே போட்டியிட்டால்
நிச்சயமாய் தோற்றுவிடுவோம் என்பதனால் தேர்தலையே புறக்கணித்துவிட்டு
பதுங்கிக்கொண்ட கடைந்தெடுத்த கோழைதான் கருணாநிதி.
அதற்கு அவர் பூசிமெழுகிய காரணம், “நான் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருக்கிறேன்” என்பதைத்தான்!
அவர் எதற்காக மேலவை உறுப்பினராக மாறினார் என்ற கேள்விக்கு விடையே, 1984 தேர்தலிலே போட்டியிட்டால் கருணாநிதிக்கு டெபாசிட்டும்
கிடைக்காத படுதோல்வியைத் தருவதற்கு தமிழகம் ஆயத்தமாக இருந்தது என்பதாலே ஒரு புறவழி ஏற்பாடாக தனது சட்டமன்ற மேலவை உறுப்பினர்
பதவியைப் பயன்படுத்தி பதுங்குகுழியை தனக்குத் தானே அமைத்துக் கொண்டார்
என்பதே உண்மை.
அதனால, பதிமூன்று தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டார் என்பது
பிழையான கணக்கு!
அந்த 1984 தேர்தலிலே கருணாநிதி களத்திலிருந்தே தலைமறைவான கதையோடு சேர்த்து, அண்ணாநகர் தொகுதியிலே கழக வேட்பாளர் ஹண்டேயிடம் அவர்
699 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்ட பின்னணியையும்
பூதக் கண்ணாடி கொண்டு பார்த்தால் கருணாநிதி ஒன்றும் சாதனையாளர் அல்ல
என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...