Thursday, May 19, 2016

'NOTA' vs ' NOTE'


'நோட்டாவுக்கும்' மற்றும் 'நோட்டுக்கு'' ஒட்டுப் போடுபவர்களும் என்னைப் பொறுத்தவரை ஐனநாயக கடமையாற்றுவதிலிருந்து தவறியவர் ஆவார்கள். ஏனென்றால் நோட்டாவின் ஒட்டுக்கள் எந்த ஒரு வேட்பாளரின் வெற்றி தோல்வியை பாதிப்பதில்லை. அந்த ஒட்டுககளை கணக்குலேயே எடுத்துக்கொள்ளமாட்டார்கள். இதுவரை நோட்டவின் ஒட்டுக்களுக்கு எனக்கு தெரிந்து எந்த சட்டபூர்வ அதிகாரத்தையும், சக்தியையும் வழங்கவில்லை. உதாரணமாக ஒரு தொகுதியில் இத்தனை சதவீதம் நோட்டாவிற்கு ஒட்டுக்கள் விழுந்தால் அந்த தொகுதியின் தேர்தல் முடிவுகள் ரத்துசெய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என்று சொல்லவில்லை. அதனால் என்னைப் பொறுத்தவரை நோட்டாவிற்கு ஒட்டுப் போடுபவர்கள் பெரும்பாலும் அந்த தொகுதியின் யார் நல்ல வேட்பாளர் என்று தெரியாததால்தான் இம்மாதிரி நோட்டாவிற்கு ஒட்டுப் போட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.
பண நோட்டுக்கு ஒட்டு போடுவதைக்காட்டிலும் பிச்சை எடுத்தாவது வாழலாம். சட்டவிதிமீறலோடு பணத்தை வாங்கிகொண்டு போடும் ஒட்டுக்கள் கணக்கில்கொள்ளப்பட்டு அது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. சட்டப்பூர்வமாக ' நோட்டாவிற்கு' பணம் வாங்காமல் போடும் ஒட்டுக்கள் ஒட்டுக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததோடு அது அந்த தொகுதியின் வெற்றி தோல்வியையும் பாதிப்பதில்லை. இதுதான் இந்தியாவின் விசித்திரமான ஐனநாயக தேர்தல்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...