Thursday, May 19, 2016

சட்டசபை தேர்தல் வெற்றி.. சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்



தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் நாளை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் முதன் முறையாக 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக போட்டியிட்டது. திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் 6 முனை போட்டி நிலவிய போதிலும், அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. 1984 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நாளை அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார். பிற்பகல் 2 மணியளவில், அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கும், அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், ஸ்பென்சர் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கிறார். இதையடுத்து சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு, தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக் கடிதத்தை, ஆளுநர் கே.ரோசய்யாவைச் சந்தித்து ஜெயலலிதா அளிப்பார் எனத் தெரிகிறது. இதில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் எப்போது முதல்வராக பதவியேற்பார் என்ற தேதி தெரிய வரும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...