Friday, May 27, 2016

யானையின் பலம் தும்பிக்கையிலே


அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். 


என்று திருவள்ளுவர் மனதிற்கும் முகத்துக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதற்காக எழுதிய குறள். தனக்கு அருகில் இருப்பதை பளிங்கு அப்படியே பிரதிபலிப்பது போல முகம் என்பது மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் என்ற கருத்திலுருந்து மனதை, மனதின் பல்வேறு உணர்ச்சி நிலைகளை அப்படியே முகத்தில் காணலாம் என்ற உண்மையை தெளிவாக்குகிறது, 
மனம் தோல்வியினால் துவண்டுவிடாமல் உறுதியோடு இயங்குமானால் உடல் பலம்பெற்று ஊக்கத்தோடு செயல்பட ஏதுவாகும். ஹெலன் கெல்லர் போன்றவர்கள் உடல் உறுப்புகள் பழுதான நிலையிலும் உள்ளத்தின் உறுதியினால் செயற்கறிய வெற்றிகளைக் குவித்தார்கள். உடல் எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் மனம் சோர்ந்து விட்டால் அம்மனிதன் வெற்றி காண இயலாது. பூமியில் இருப்பதும் ,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! இருக்குமிடம் எதுவோ , நினைக்குமிடம் பெரிது, போய்வரும் உயரமும் புதுப்பது உலகமும் அவரவர் உள்ளங்களே.என்ற கண்ணதாசன் வரிகள் வாழ்வில் உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு மனிதனின் உள்ளம்தான் உள்ளடக்கி இருக்கிறது என்று கூறுகிறது.
யானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே’ என்பார்கள். மனம் உறுதியான நம்பிக்கையை பற்றி நிற்குமானால் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சோர்வகற்றி சுறுசுறுப்பாக செயல்படும் முட்செடிகள் நிறைந்த காடா என்று கேட்டால் இரண்டும்தான். பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு உள்ளது. நம்பிக்கையோடு பார்த்தால் பூங்காவனம் நம்பிக்கை இல்லாமல் பார்த்தால் முட்செடிகள் நிறைந்த காடு.
என் விதியின் தலைவன் நானேதான் என்று நம்ப வேண்டும். நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் யாரோ அல்ல; நாமேதான். மனதிற்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆக்கபூர்வமான எண்ணங்களையே தாங்கி நிற்க பழக்க வேண்டும்.
“மன நிம்மதி என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் எனபது நாமே தேடிக்கொள்ளும் வறுமை என்பார் பேரறிஞர் சாக்ரடீஸ். மனம் தன்னிரக்கம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டால் காயப்பட்டுப் போகின்றது. இந்தக் காயம் ஐம்புலன்களுக்கும் பரவி மனிதரை பலவீனப்படுத்துகிறது. மனம் உறுதிமிக்க பொலிவை அடைந்தால், உடல் உறுப்புகள் செயல்திறம் பெறுகின்றன. இப்போது சொல்லுங்கள், மனதின் சீர்கெட்ட எண்ணங்களால் உடலின் உறுதி தளர்ந்து அழிவை நோக்கிப் போகலாமா அல்லது மனதை வலிமைப்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து வெற்றி பெறலாமா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...