தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம்
உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழ கை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஆகவே அத்தகைய பெண்களுக் கு ஒருசில எளிமையான அழகு குறிப்புகளை பரிந்துரைக்கிறோம்..

* கண்கள் நன்கு புத்துணர்ச்சியுடனும், கரு வளையமின்றியும் இருக்க, தினமும் காலையி ல் எழுந்ததும், உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, கண்களின் மேல் வைத்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க செல்ல வேண்டும்.
* சில பெண்களுக்கு முகத்தில் உள்ள முடியானது நன்கு தெரியும். இத னை மறைக்க வேண்டுமெனில், ஃபௌண்டேஷன்போடலாம். இல்லை
யெனில், வாரத்திற்கு ஒரு முறை எலுமிச்சையை முகத்தில் தேய்த்து வந்தால், முடி தெரியாது.
* சரும பிரச்சனைகளிலேயே முகப்பரு பிரச்ச னையால் தான் பெரும் பாலானோர் அவஸ்தைப் படுகின்றனர். இத்தகைய பிரச்சனையில் இரு ந்து விடுபட பழங்களால் செய்யப்படும் ஃபேஸ் பேக் கை, வாரத்திற்கு ஒரு முறை போட வேண்டும்.
* சரும சுருக்கம் ஏற்பட்டால், அது முதுமைத் தோ ற்றத்தை வெளிப்படு த்தும். இதனை தற்காலிக மாக மறைக்க கன்சீலர் பயன்படுத்தலாம். ஆனா ல் இயற்கையாக மறைக்க வேண்டுமெனில், தயிரை முகத்திற்கு தடவி நன்கு உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த
முறையை தொடர்ச்சியாக வாராவாரம் ஒரு முறை செய்துவந்தால், நல்லபலன் தெரியும்.
* கூந்தல் உதிர்தலைத் தடுத்து, அதன் அடர்த்தி யை அதிகரிக்க வேண்டு மெனில், பீர் அல்லது பீர் ஷாம்பு கொண்டு கூந்தலை அலச வேண்டு ம். வேண்டுமெனில், ஒயின், வோட்கா போன்ற வற்றையும் பயன்படுத்த லாம்.

* முழங்கை வறட்சியுடன் அசிங்கமாக இருந்தால், அதனை போக்க தினமும் ஆலிவ் ஆயில் கொண் டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, முழங் கையும் மென்மையாக இருக்கும்.
No comments:
Post a Comment